தந்தை பெரியார் பெயரில் ஓட்டலா..! அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கிய இந்து அமைப்பினர்...! தட்டி தூக்கிய போலீஸ்

Published : Sep 14, 2022, 03:30 PM IST
தந்தை பெரியார் பெயரில் ஓட்டலா..! அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கிய இந்து அமைப்பினர்...! தட்டி தூக்கிய போலீஸ்

சுருக்கம்

மேட்டுப்பாளையம் அருகே தந்தை பெரியார் பெயரில் உணவகம் திறக்க எதிர்ப்பு, ஓட்டலை அடித்து உடைத்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

தந்தை பெரியார் பெயரில் உணவகம்

தந்தை பெரியாரின் கொள்கையில் தீவிராக பின்பற்றி வருபவர் கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த பிரபாகரன், இவர் காரமடையில் தந்தை பெரியார் பெயரில் உணவகத்தை தொடங்க திட்டமிட்டார். இதனையடுத்து நேற்றைய தினம் இதற்கான பணிகள் முடிவடைந்து தந்தை பெரியார் என்கிற பெயரில் ஓட்டலை தொடங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த  இந்து முன்னனி அமைப்பினர்  தந்தை பெரியார் பெயரில் உணவகம் திறப்பது குறித்து விமர்சித்ததோடு, ஓட்டல் உரிமையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஓட்டல் உரிமையாளரும், கடை ஊழியர்களும் எதிர்த்து குரல் கொடுத்தனர். 

செங்கலை காட்டி வாக்கு சேகரித்த உதயநிதி..! அந்த செங்கலை வைத்தாவது அடிக்கல் நாட்டுவாரா முதல்வர்- ஆர்பி உதயகுமார்

அடித்து நொறுக்கிய இந்து அமைப்பினர்

அப்போது வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில் அந்த கும்பல் கடையை அடித்து நொறுக்கியும் கடையின் உரிமையாளர் மற்றும் அங்கு பணி செய்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து ஓட்டலை சூறையாடிய கும்பல்  ஓட்டல் உரிமையாளரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.தாக்குதல் சம்பவம் தொடர்பாக  போலீசாரிடம்  பிரபாகர்  புகார் கொடுத்ததையடுத்து  இந்து முன்னணியைச் சேர்ந்த  ரவிபாரதி,சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிராபகரன் என 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை பெரியார் பெயரில் தொடங்கப்பட்ட கடையை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து... 4 மாணவர்கள் காயம் ..! திமுக அரசின் மெத்தனமே காரணம்- ஓபிஎஸ் ஆவேசம்

 

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?