
அண்ணியுடன் உல்லாசமாக இருந்த தம்பியை உருட்டுக்கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் காக்கு வாரிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(38). இவரது தம்பி பிரதாப்(25) இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பிரதாப்பின் மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்டார். இதனால், பாலாஜி பிரதாப்பை தனது வீட்டில் தங்க அடைக்கலம் கொடுத்தார். இந்நிலையில், பிரதாப் தனது அண்ணியுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- பார்த்ததுமே பத்திக்கிச்சு.. 20 வயது இளைஞரை கரெக்ட் செய்து உல்லாசம்.. வெளியே கசிந்த கள்ள உறவால் நடந்த அதிர்ச்சி
அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதேபோல், நேற்று முன்தினம் இரவும் வீட்டில் அண்ணியுடன் பிரதாப் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்த பாலாஜி கடும் ஆத்திரமடைந்தார். அங்கிருந்து உருட்டுக்கட்டையை எடுத்த பாலாஜி பிரதாப்பை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து, பிரதாப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவான பாலாஜியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க;- 23 வயது இளைஞருடன் 3 குழந்தைகளின் தாய் கள்ளக்காதல்! வேப்ப மரத்தில் இருவரும் என்ன செய்தார்கள் தெரியுமா?