13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததால் ஆண் குழந்தை! 76 வயது காமக்கொடூரனுக்கு சரியான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Published : Sep 14, 2022, 09:19 AM ISTUpdated : Sep 14, 2022, 10:15 AM IST
13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததால் ஆண் குழந்தை! 76 வயது காமக்கொடூரனுக்கு சரியான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

சுருக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்வர்பாஷா(76). இவர் வியாபாரம் விஷயமாக சென்று வந்த இடத்தில் தந்தையை இழந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சிறுமியை பார்க்கும் போதெல்லாம் கடைக்கு அழைத்து சென்று தின்பண்டங்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் தொடர்பாக 76 வயது முதியவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்வர்பாஷா(76). இவர் வியாபாரம் விஷயமாக சென்று வந்த இடத்தில் தந்தையை இழந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சிறுமியை பார்க்கும் போதெல்லாம் கடைக்கு அழைத்து சென்று தின்பண்டங்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நைசாக சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து ஆசை வார்த்தை கூறி அன்வர்பாஷா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பம் ஆனார். இதனையடுத்து, சில நாட்களுக்கு பிறகு வயிற்று வலியால் சிறுமி அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மெடிக்கல்  ஷாப்பில் சிறுமியின் தாய் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். 

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கடந்தாண்டு சிறுமிக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. சிறுதியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை அன்வர்பாஷா பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் அன்வர்பாஷாவை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில்,  சிறுமியை தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பதாக கூறி கடத்தி சென்றதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?