பெற்ற தாயிடமே கடத்தல் நாடகத்தை அரங்கேற்றிய மகள்.. 1வது முறை அல்ல, இது 3வது முறை - எதுக்கு தெரியுமா ?

Published : Sep 13, 2022, 05:41 PM IST
பெற்ற தாயிடமே கடத்தல் நாடகத்தை அரங்கேற்றிய மகள்.. 1வது முறை அல்ல, இது 3வது முறை - எதுக்கு தெரியுமா ?

சுருக்கம்

பெற்ற தாயிடமே பெண் ஒருத்தி கடத்தல் நாடகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தாயிடம் பணம் பறிப்பதற்காக ஒரு முறை அல்ல, கிட்டத்தட்ட நான்கு முறை கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளார்கள். அந்த பெண் தனது தாயிடமிருந்து 50,000 டாலர்களை மிரட்டி பணம் பறிக்க விரும்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. 

இதற்காக அந்த பெண் தனது காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உதவியுடன் திட்டத்தை வகுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சம்பந்தப்பட்ட பெண் கண்களை மூடிக்கொண்டு, இரத்தம் சிந்தியபடி ஒரு போலியான வீடியோ ஒன்றினை எடுத்து தன்னுடைய தாயிக்கு அனுப்பியுள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் கடத்தல்காரர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அந்த பெண் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு..தாயை பிரிந்த குதிரை.. பேருந்தில் உள்ள படத்தை பார்த்து துரத்திய குதிரை - நெகிழ வைத்த காணொளி

அந்த வீடியோவில், ‘அம்மா.. அவர்கள் என்னை கடத்திச் சென்றுவிட்டனர். போலீசிடம் எதுவும் சொல்ல முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் அப்படி  செய்தால், அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள். எனக்கு உணவு தராமல், அடிக்கிறார்கள்’ என்று கூறினாள். இதுகுறித்து பெண்ணின் தாயார் போலீசிடம் புகார் அளிக்க, போலீசார் களத்தில் குதித்து விசாரிக்க ஆரம்பித்தனர். 

மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு

போலீஸ், அந்த பெண்ணையும்,  மற்ற நான்கு பேரையும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் கைது செய்தனர். அவர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு முன் அந்த பெண், தனது தாயிடம் மூன்று முறை, குறைந்தது 45,000 டாலர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..‘அந்த’ இடத்தில் கைவைத்த பாஜக பொதுச்செயலாளர்.. சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன ? சர்ச்சையில் பாஜக!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!