நாங்க உங்களை படிக்க வைக்குறோம்.. வாங்க பழகலாம் என்று கூறி 2 சிறுமிகளை விடிய விடிய சீரழித்த காம கொடூரர்கள் !!

Published : Apr 18, 2022, 10:11 AM IST
நாங்க உங்களை படிக்க வைக்குறோம்.. வாங்க பழகலாம் என்று கூறி 2 சிறுமிகளை விடிய விடிய சீரழித்த காம கொடூரர்கள் !!

சுருக்கம்

ஜெய்ப்பூரில் தன்பாத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகளை இரண்டு ஆண்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்மான் மற்றும் ஆரிஃப்  என்பவர்கள் தான் இந்த சம்பவத்தை செய்த குற்றவாளிகள். இரண்டு சிறுமிகளிடமும் நட்பாக பழகினர். நாளடைவில் அதை காதலாக மாற்றி இரண்டு சிறுமிகளையும் தனது வழிக்கு இரண்டு பேரும் கொண்டு வந்தனர். கடந்த ரம்ஜான் பண்டிகையின் போது அர்மான் அவர்களது வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு வைத்துக்கொண்டனர்.

பிறகு உங்களை படிக்க வைக்கிறேன், பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி சிறுமிகளின் மனதை மாற்றி இழுத்து சென்றுள்ளனர். தனது மகள்கள் காணாமல் போனதையடுத்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், ஏப்ரல் 7ஆம் தேதி, இளைய மகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்து அர்மான் தனது மகள்களை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்தார்.

அதேபோல  மூத்த சகோதரியின் கல்விக்கு உதவுவதாகக் கூறி,அவரை ஏமாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். மகள்கள் இருவரும் நீண்ட நாட்களாக வராததால், தாய் ஜாரியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தேடுதல் தொடங்கியபோது, ​​அர்மான், தனது மைத்துனரின் உதவியுடன், இரு சிறுமிகளையும் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில், அர்மானுடன் சிறுமிகள் வசித்து வந்த ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்ற ஆரிப்பை போலீசார் கைது செய்தனர்.

இரு சகோதரிகளும் அர்மான் தங்களை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினர். அர்மானும் அவரது மைத்துனரும் யாரிடமாவது உண்மையை சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார்கள் என்றும் கூறினர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : விரைவில் சுயஉதவிக்குழு & கல்விக்கடன் தள்ளுபடியா..? 'குட்' நியூஸ் சொன்ன அமைச்சர் நேரு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!