இன்ஸ்டாவில் 24 மணி நேரமும் காதல்..கண்டித்த பெற்றோர்..10ம் வகுப்பு மாணவி எடுத்த துணிச்சல் முடிவு !

Published : Apr 18, 2022, 09:52 AM IST
இன்ஸ்டாவில் 24 மணி நேரமும் காதல்..கண்டித்த பெற்றோர்..10ம் வகுப்பு மாணவி எடுத்த துணிச்சல் முடிவு !

சுருக்கம்

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார், இவரின் மகள் திவ்யதர்ஷினி அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஒரே மகள் என்பதால் அவரை செல்லமாக வளர்த்து வந்தனர். 

இன்ஸ்டாகிராம் காதல் :

கடந்த 10ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அவர்கள் சிறுமியை தேடி வந்தனர். இந்த சூழலில் கடந்த 12ம் தேதி மதுரை அலங்கநல்லூர் அருகே பணங்காடி பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டார். 

சென்னையில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்த போலீசார் சிறுமி கைப்பட எழுதிய 7 பக்கம் கடிதம் ஒன்றை மீட்டனர். அதில் நான் சாகப்போகிறேன் என்றும் என்னால் பெற்றோருக்கும் எந்த தொந்தரவும் வாராது எனவும் தன் நண்பருக்கு தன்னுடைய பெற்றோர் எந்த இடையுறும் செய்யகூடாது என எழுதி வைத்திருந்தார். இன்ஸ்டாகிராமில் துடிப்பாக இயங்கி வந்த திவ்யதர்ஷினிக்கு அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

நட்பே வினையான சம்பவம் :

இருவரும் நட்பாக பழகி வந்தாக கூறப்பட்டது. இவர்களின் விவகாரம் திவ்யதர்ஷினி வீட்டாருக்கு தெரிய வரவே அவர்கள் மகளை அழைத்து கண்டித்தனர். மேலும் படிப்பிலும் சிறுமி பின் தங்கவே ஆசிரியர்கள் மாணவியை கண்டித்தாக தெரியவந்தது பெற்றோரை அழைத்து வர பள்ளி நிர்வாகம் கூறியது. அப்போது சிறுவனுடான நட்பை காதல் என நினைத்து பெற்றோர் சிறுமியை கண்டித்து உள்ளனர். 

இதனால் விரக்கத்தி அடைந்த திவ்யதர்ஷினி கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனியே பேருந்து ஏறி திருச்சிக்கு சென்றுள்ளார். அப்போது பெண் ஒருவரிடம் செல்போன் வாங்கி தன் இன்ஸ்டாகிராம் நண்பனுக்கு போன் செய்து. நான் சாக போகிறேன் என்றும் இனி என்னால் எந்த தொந்தரவும் வராது என கூறியிருக்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து மதுரைக்கு தனியே சென்ற அவர் அலங்காநல்லூர் செல்லும் பாதையில் பனங்கட்டி என்னும் பகுதியில் இறங்கியிருக்கிறார்.

தற்கொலை செய்த சிறுமி :

அங்கு புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றுள்ளார், அங்கு சென்ற அவர் 7 பக்கம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தான் கொண்டு வந்த புடவையை எடுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஆண் நண்பனுடன் இருந்த நட்பை காதல் என நினைத்து பெற்றோர் கண்டித்த விரக்தியில் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : விரைவில் சுயஉதவிக்குழு & கல்விக்கடன் தள்ளுபடியா..? 'குட்' நியூஸ் சொன்ன அமைச்சர் நேரு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!