கூல்டிரிங்ஸில் சரக்கு ஊற்றி சிறுமியை சீரழித்து கொடூரன்கள்.. வீடியோ வைரலானதால் பதறிய பெற்றோர்..!

Published : Nov 16, 2022, 03:27 PM ISTUpdated : Nov 16, 2022, 04:18 PM IST
கூல்டிரிங்ஸில் சரக்கு ஊற்றி சிறுமியை சீரழித்து கொடூரன்கள்.. வீடியோ வைரலானதால் பதறிய பெற்றோர்..!

சுருக்கம்

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள அந்தரப்பட்டியைச் சேர்ந்த ரங்கநாதன்(21). இவர் 16 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த ஏப்ரல் மாதம் காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வீடியோ வைரலானதை அடுத்து 3 பேர் கைதுத செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் ததீவிரமாக தேடி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள அந்தரப்பட்டியைச் சேர்ந்த ரங்கநாதன்(21). இவர் 16 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த ஏப்ரல் மாதம் காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொண்டு காதலன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  இதை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை காட்டி மிரட்டி அவ்வப்போது சிறுமியை அடிக்கடி கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி

நாளடைவில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் படிப்பை நிறுத்திவிட்டு மகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர். குழந்தை திருமணம் குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இத தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரங்கநாதன் (21), மணி  (24), தர்மன் (25) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.  தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

PREV
click me!

Recommended Stories

20 தூக்க மாத்திரைகள்.. துடிதுடித்த கணவர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி விடிய விடிய!
பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..