செல்போன் கடையில் புகுந்து செல்போனை ஆட்டையை போட்ட பலே திருடன்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்..!

Published : Nov 15, 2022, 03:18 PM IST
 செல்போன் கடையில் புகுந்து செல்போனை ஆட்டையை போட்ட பலே திருடன்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்..!

சுருக்கம்

கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் சாரதா ரோடு பகுதியில் உள்ள பி.கே. செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த செல்போன் கடையில்   அடையாளம் தெரியாத மர்ம நபர் உள்ளே புகுந்து கடையில் இருக்கக்கூடிய செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். 

கோவை பகுதியில் உள்ள செல்போன்  கடையில் மர்மநபர் புகுந்து செல்போன்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் சாரதா ரோடு பகுதியில் உள்ள பி.கே. செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த செல்போன் கடையில்  
அடையாளம் தெரியாத மர்ம நபர் உள்ளே புகுந்து கடையில் இருக்கக்கூடிய செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். இது சம்பவம் தொடர்பாக ஒரு லட்சம் மதிப்பு உள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக கடையின் உரிமையாளர் புண்ணியக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரின் அப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அப்பகுதியில் இருந்தத சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடைக்குள் புகுந்து செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!