காதலியை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜுக்குள் வைத்திருந்த காதலனை செய்துள்ளது காவல்துறை. இந்த வழக்கு இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்த கொலை தொடர்பான பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மும்பையில் பிரபல கால் சென்டரில் வேலை பார்த்து வந்திருக்கிறார் ஷ்ரத்தா. அதே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தவர் அப்தாப் அமீன் பூனாவாலா. இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியிருக்கிறது. இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் இருவரும் மும்பையில் இருந்து வெளியேறி டெல்லி சென்று , வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தந்தையுடன் செல்போன் வாயிலாக அவ்வப்போது பேசி வந்திருக்கிறார் ஷ்ரத்தா.சில நாட்களாக மகளிடம் இருந்து எந்த போனும் வரவில்லை என்பதால் தந்தை விகாஸ் மதன் கடந்த எட்டாம் தேதி டெல்லி சென்று இருக்கிறார். மகள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டி கிடந்திருக்கிறது.
இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
தொடர்ந்து வீடு பூட்டிய கிடக்கவும் சந்தேகமடைந்த அவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். போலீசார் அப்தாப் அமீனை பிடித்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல்கள் வந்திருக்கின்றன. டெல்லியில் காதலர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்தாப் அமீனை வற்புறுத்தி இருக்கிறார்.
இதில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த அப்தாப் அமீன் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் போலீசில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜுக்குள் வைத்திருந்திருக்கிறார் . நள்ளிரவில் வெட்டப்பட்ட துண்டுகளில் ஒவ்வொரு துண்டாக எடுத்துச் சென்று டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வீசி இருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் சில துண்டுகளை எடுத்துச் சென்று 18 நாட்களைப் காதலியின் உடல் பாகங்களை அப்புறப்படுத்தி இருக்கிறார். டெல்லி போலீசாரின் விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்தது. காதலியை கொன்று 35 பாகங்களாக உடலை வெட்டி பிரிட்ஜுக்குள்அடைத்து வைத்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க..நாட்டையே அதிர வைத்த பயங்கர கொலை வழக்குகள்..!
இந்த கொலை தொடர்பான பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கொலை செய்ய திட்டமிட்டு சமீபத்தில் 300 லிட்டர் பிரிட்ஜை வாங்கியுள்ளார் அப்தாப். அவர் வேலை பார்கும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஷிரத்தாவின் கைகளை 3 துண்டாகவும் கால்களை 3 துண்டாகவும் உடலை மொத்தமாக 35 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த துண்டுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார். பின்னர் தினமும் இரவு 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளார்.
சைக்கோ கில்லர் தொடரான டெக்ஸ்டரை பார்த்து தான், அவளது உடலை துண்டுத்துண்டாக வெட்டி வீசியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், காதலியை துண்டு துண்டாக கொன்று விட்டு ஒன்றுமே தெரியாதது போல, பல்வேறு காதலிகளுடன் ஊர் சுற்றியுள்ளார் என்றும் அவரது நண்பர்கள் போலீசிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது மேலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?