வலுக்கட்டாயமாக மதுபானம் ஊற்றி 20 வயது நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
வலுக்கட்டாயமாக மதுபானம் ஊற்றி 20 வயது நர்ஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் வேறு இடத்தில் பணி செய்ய விரும்பியதை அடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்டர்வியூக்காக கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில், வேலூர் செல்ல அரசு பேருந்துக்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- பட்டா மாறுதலுக்கு வந்த திருமணமான பெண்ணை மிரட்டி மகாபலிபுரத்தில் ரூம் போட்டு பலாத்காரம் செய்த விஏஓ..!
அப்போது அங்கு வந்த ஆத்தூர், வடபாதி பாலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் சரவணன் (29) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து, அப்பெண்ணை காரில் கடத்தி சென்றனர். இதனையடுத்து, வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, அன்று முழுவதும் சரவணனும் கூட்டாளிகள் 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போதை தெளிந்ததும் அவர்களிடம் ஒருவழியாக தப்பித்து நடந்த சம்பவங்களை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதையும் படிங்க;- பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு கணவர் செய்த வெறித்தனமான காரியம்.. மிரண்டு அதிர்ந்துபோன மக்கள்..!
இதையும் படிங்க;- அடிக்கடி வெளியூர் சென்ற மகன்.. சைடு கேப்பில் மருமகளுக்கு பிராக்கெட் போட்டு உல்லாசத்துக்கு அழைத்த மாமனார்.!
இதனால், அதிர்ச்சியடைந் தாய் இதுகுறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார், கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியான சரவணனை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.