சென்னையில் 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் செல்போனில் மாணவிகளுக்கு தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு செய்து வந்ததுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் சென்னை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஸ்ரீதர் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நலபாதுகாப்பு அதிகாரி கஸ்தூரியிடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்இ குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு வெளியானது.. எப்படி பார்ப்பது..? நேர்காணல் எப்போது..? முழு தகவல்
மேலும் படிக்க:சமூக வலைதளம் மூலம் பழகி மாணவியை கற்பழித்த இளைஞர்...! நிர்வாண படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்
இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் பள்ளி மாணவிகளின் செல்போன் எண்களை ஆசிரியர் ஸ்ரீதர் பெற்றுள்ளார். மேலும் மாணவிகளிடம் ஆபாசமாகவும் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலும் பேசி வந்தது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், டியூஷன் எடுக்கும் இடத்திலும் மாணவிகளிடம் அத்துமீறல் ஈடுபட்டதும் ஆசை வார்த்தை கூறி மாணவிகளை வெளியில் அழைத்துச் சென்றும் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் அம்பல்மாகியுள்ளது. முன்னதாக மாணவிகளுக்கு ஆபாசமாக அனுப்பிய வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் மற்றும் செல்போனில் பேசிய உரையாடல்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி சர்ச்சை ஆகியுள்ளது. தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் புகாருக்குள்ளான ஆசிரியர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியரான ஸ்ரீதரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஸ்ரீதர் மீது போக்சோ, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.