சமூக வலை தளம் மூலம் மாணவியிடம் பழகி, திருமணம் செய்வதாக கூறி கற்பழித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மாணவியை ஏமாற்றிய இளைஞர்
நவீன உலகத்தில் காதல் என்கிற பெயரில் தவறான நடவடிக்கைகள் அதிகமாகிவருகிறது. கடிகார முட்களின் வேகத்திற்கு ஏற்ப இன்றைய காதல் பரபரப்பாக தொடங்கி, பரபரப்பாகவே முடிவடைந்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது மாணவி ஒருவர் சமூக வலைதளமான ஷேர்சாட் மூலம் பழகி தனது கற்பை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால் ஆன்லைன் மூலம் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் என்பதால் ஸ்மார்ட் போன் மூலம் பாடங்களை கவனித்து வந்துள்ளார். அப்போது ஷேர்சாட் என்ற செயலின் மூலம் பழனியை சேர்ந்த ஜேசுதாஸ் (21) என்ற இளைஞர் பழக்கமாகி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டில் மாணவி தனியாக இருந்த போது ஜேசுதாஸ் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஜேசுதாஸ் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் ஜெயசுதாஸ் பலமுறை மாணவி வீட்டிற்கு சென்று மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை காட்டி பாலியல் கொடுமை..! இசையமைப்பாளர் மீது பெண் புகார்
புகைப்படம் அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்
இந்நிலையில் ஜேசுதாஸ் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வாட்ஸ்- அப்பிற்கு ஜேசுதாஸ் ஒரு புகைப்படத்தை அனுப்பி இருந்தார். மாணவியும் நிர்வாண படத்தை அனுப்பி தனக்கு பணம் தர வேண்டும். அப்படி பணம் தரவில்லை என்றால் இந்த படத்தை சமூக வலைத்தளத்தில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணிவியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜேசுதாசை தேடி வந்தனர். இதனையடுத்து கோவையில் வேலை பார்த்து வந்த ஜேசுதாஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் இதில், குற்றத்தை ஜேசுதாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து போக்சோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள்