திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே மனைவி கர்ப்பமாகியுள்ள சம்பவம் கணவன் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் குடும்பத்தினர் மீது கணவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே மனைவி கர்ப்பமாகியுள்ள சம்பவம் கணவன் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் குடும்பத்தினர் மீது கணவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
முழு விவரம் பின்வருமாறு : - பொதுவாக ஒரு பையன் திருமணம் என்ற போர்வையில் பெண்ணை ஏமாற்றி மோசடி செய்து விட்டார் என்ற புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இப்போது அது தலைகீழாக மாறியுள்ளது. திருமணம் என்ற போர்வையில் இளம்பெண் இளைஞரை மோசடி செய்துள்ள சம்பவம் தான் இது. திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமான பெண் இளைஞரை திருமணம் செய்துகொண்டு மோசடி செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: இருக்கிற பிரச்சினையில இது வேற.. தொடர்ந்து தொல்லை கொடுக்கும் புகழேந்தி.. கடுப்பாகும் எடப்பாடியார்..!
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சீனிவாசராவ், பி.டெக் படித்துள்ள இவர் தற்போது மோட்டோ கண்ட்ரோலர் ஆக பணியாற்றி வருகிறார். சீனிவாச ராவ் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகன் ஆவார், அவரது தந்தை வருவாய்த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். தனது ஒரே மகனுக்கு பெற்றோர் அதிக பெருட்செலவில் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தனர். அதே மாவட்டத்தை சேர்ந்த வருவாய் துறை அதிகாரி ஸ்ரீலட்சுமி என்பவரின் மகள் பிரியாவுடன் சீனிவாசராவ் திருமணம் ஊர் மெச்சும்படி நடந்தது.
இதையும் படியுங்கள்: அடிக்கடி டார்ச்சர்.. கணவனை ஒரேபோட போட்டு கழிவறையில் மூட்டை கட்டி வைத்த மனைவி.. பிறகு நடந்த பயங்கரம்.
சீனிவாசராவ் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தினர், ரிசப்ஷன் முடிந்தவுடனே மகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார் தாய் ஸ்ரீலட்சுமி, திருமணம் நடந்து இதுவரை தங்களுக்கிடையில் முறையாக முதலிரவுகூட நடக்கவில்லை என ஸ்ரீனிவாச ராவ் பகீர் தெரிவித்துள்ளார். குடும்பப் பெரியவர்கள் குண்டூரில் எங்களுக்கு வீடு வாடகை பார்த்து குடியமர்த்தினார், அப்போது அந்த வீட்டில் ஒரே ஒரு நாள் மட்டும் தங்கிய மனைவி மறுநாள் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக சீனிவாசராவ் கூறியுள்ளார்.
இதற்கிடையில் எப்படி தன் மனைவி கர்பமானார் என்று அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இந்நிலையில் ஸ்ரீனிவாச ராவ் தன்னை கடுமையாக தாக்கி வரதட்சணை கொடுமை செய்ததாக பிரியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கனவு தன்னுடன் 10 லட்ச ரூபாய் கேட்டதாகவும், தனக்கு ஏற்கனவே வேறோருவருடன் நிச்சயம் ஆனது கணவருக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஸ்ரீலட்சுமி விஆர்ஓவாக பணியாற்றிய அதே கிராமத்தில் உள்ள விமானப்படை ஊழியருடன் மகள் பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் செய்ததாக தெரிகிறது. ஆனால் நிச்சயித்தபடி திருமணம் நடைபெறவில்லை.
இந்த விஷயத்தை மறைத்து தனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாக சீனிவாசராவ் குற்றம்சாட்டியுள்ளார். வேறொருவருடன் குடும்பம் நடத்திய மகளை ஸ்ரீலட்சுமி தனது தலையில் கட்டிவைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். தன்னை ஏமாற்றி மோசடி செய்த தாய் மகன் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.