அடிக்கடி டார்ச்சர்.. கணவனை ஒரேபோட போட்டு கழிவறையில் மூட்டை கட்டி வைத்த மனைவி.. பிறகு நடந்த பயங்கரம்.

Published : Jun 29, 2022, 11:09 AM IST
அடிக்கடி டார்ச்சர்.. கணவனை ஒரேபோட போட்டு கழிவறையில் மூட்டை கட்டி வைத்த மனைவி.. பிறகு நடந்த பயங்கரம்.

சுருக்கம்

கணவனை அடித்து கொலை செய்துவிட்டு  மனைவி சடலத்தை  கழிவறையில் மறைத்து வைத்து ஏமாற்றிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கணவனை அடித்து கொலை செய்துவிட்டு  மனைவி சடலத்தை  கழிவறையில் மறைத்து வைத்து ஏமாற்றிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கொடூர சம்பவம் அரியானாவில் நடந்துள்ளது.

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல எல்லா குடும்பத்திலும் சண்டைகளும் சச்சரவுகளும் சகஜம்தான், ஆனால் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும், சிலர் திருமணத்திற்கு முன்பு வளர்ந்த சூழ்நிலைகள் வித்தியாசமானதாக இருக்கலாம், அதனால் மற்றவர்களுடன் ஒத்துப் போவதற்கு சில நாட்கள் ஆகும் ஆனால் எந்த சூழ்நிலையும் சிலர் எளிதில் சமாளித்து விடுவார், ஆனால் இது தெரியாதவர்கள் மோதலுக்கு ஆட்பட்டு கொலை, தற்கொலை வரை தள்ளப்படும் சூழலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

இதையும் படியுங்கள்:   நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் கமிட்டியில் இருந்து வந்த அழைப்பு... படு குஷியில் ரசிகர்கள்

சிலர் கோபத்தில் எடுக்கும் முடிவுகள் தலைப்புச் செய்தியாகவே மாறிவிடுகிறது. அந்த வரிசையில் கணவனை மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- ஹரியானா  மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லோக தாஸ் மற்றும் கமலேஷ் ஆகியோர் கணவன் மனைவி ஆவார். இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே அவர்களுக்கு தகராறு இருந்து வந்தது. அது திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்தது. ஒரு நாள் கணவன் மனைவிக்கு இடையே சண்டை உச்சகட்டத்தை எட்டியது.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருகிறார்..தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் மனு

அப்போது  கோபத்தின் உச்சத்துக்கே சென்ற மனைவி கமலேஷ் கணவனை சரமாரியாக தாக்கினார். அதில் நிலைகுலைந்த கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கணவனின் கை,கால்களை கோணிப்பையில் கட்டி இரண்டு நாட்கள் வீட்டில் கழிவறையில் மூடினார். அப்போது ரோஹ தாசின் சகோதரி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது, அது குறித்து அவர் கேட்டதற்கு எங்கேயாவது எலி இறந்திருக்கலாம் என்றும் அண்ணன் வெளியில் போனால் இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை என பதிலளித்தார்.

கமலேஷ் இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி கழிவறை பூட்டி வைத்து இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தார். அதை தொடர்ந்து காவல் நிலையத்தில் அண்ணன் குறித்து புகார் கொடுத்தார். இதற்கிடையில் மனைவி கமலேஷ் கணவனின் சடலத்தை அருகிலிருந்த கழிவு நீரோடையில் வீசினார். இதனால் ஊர் முழுக்க துர்நாற்றம் வீசியது, இதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் செய்தனர். 

ஓடையில் இருந்த சடலத்தை போலீஸார் மீட்டனர். ரோஹ தாசியின் சடலம் என அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது கணவனை கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மனைவியே கணவனை அடித்து கொன்று உடலை மறைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!