தொடர்ந்து மாணவிக்கு ஆபாச மெசேஜ்.. தொடக்கூடாத இடங்களில் கை வைத்து அசிங்கம்.. தமிழ் ஐயா சில்மிஷம்.

Published : Aug 13, 2022, 09:01 AM ISTUpdated : Aug 13, 2022, 09:23 AM IST
தொடர்ந்து மாணவிக்கு ஆபாச மெசேஜ்.. தொடக்கூடாத இடங்களில் கை வைத்து அசிங்கம்.. தமிழ் ஐயா சில்மிஷம்.

சுருக்கம்

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன்  உடல் ரீதியான பாலியல் சீண்டலில்  தமிழ் ஆசிரியர் ஈடுபட்டுவந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன்  உடல் ரீதியான பாலியல் சீண்டலில்  தமிழ் ஆசிரியர் ஈடுபட்டுவந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில்  அந்த ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் அன்றாடம் அரங்கேறி வருகிறது, இந்த வரிசையில் சென்னை கல்பாக்கம் அருகே இயங்கிவரும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் ஒருவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஆபிஸ் தோழன் கூப்பிட்டதால் ஓட்டலுக்கு போன இளம் பெண்.. ஃபுல்லா மது குடிக்க வைத்து இரவெல்லாம் உல்லாசம்.

முழு விவரம் பின்வருமாறு:- கல்பாக்கம் அடுத்துள்ள புதுப்பட்டினத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது, அப்பள்ளியில்  கடலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன்  (45) என்பவர் அங்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் ஆசிரியர் மணிமாறன் மீது பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னிடம் ஆசிரியர் அத்துமீறி நடந்து கொள்வதாக பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள்  பள்ளி நிர்வாகத்திடம் தனது  மகன் சந்திக்கும் அவலம் குறித்து புகார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: படிக்காதவன்கூட காதலா..? படுக்கையில் வைத்து மகளை துடிக்க துடிக்க கொன்ற தந்தை. புதுவகை ஆணவக்கொலை.

ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் அப்படிப்பட்டவர் அல்ல, அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க முடியாது என மறுத்ததாக தெரிகிறது, இதனால் கொந்தளிப்படைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்பாக்கம் ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு  மாமல்லபுரம் டிஎஸ்பி வருகை தந்தார், பள்ளியில் நடந்தவற்றை அவரிடம் கூறினர், நிச்சயம் அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார், பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்துதமிழ் ஆசிரியர் மணிமாறனை மாமல்லபுரம் மகளிர் அனைத்து காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் தமிழ் ஐயா மணிமாறன் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசுவது, அவர்களை பாலியல் ரீதியாக சீண்டுவது போன்ற சம்பவங்களில் பல நாட்களாக ஈடுபட்டு வருகிறார்,  ஆனால் பள்ளி நிர்வாகம் இதை கண்டுகொள்வதே இல்லை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடந்த 3 மாதமாக பயங்கர டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். 

தன்னைப் பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என மாணவர்களை மிரட்டி வந்துள்ளார். இதை பள்ளி நிர்வாகம்  முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது, எனவே பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?