பிறந்த பச்சிளம் குழந்தையை பக்கெட் தண்ணீரில் கொன்ற தாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்

By Raghupati R  |  First Published Aug 12, 2022, 8:25 PM IST

வீட்டில் இருந்த பக்கெட் தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்து தாய் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கேரள மாநிலம், இடுக்கி அடுத்த தொடுபுழா கரிமண்ணூரில் உள்ள ஒரு பெண், அதிக இரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது. அந்த பெண் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இன்று அதிகாலை 1 மணியளவில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் பெண்ணும் அவரது கணவரும் மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனையை அடைந்த பிறகு, சில மணி நேரங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்ததையும், அதன் காரணமாக இரத்தப்போக்கு ஏற்பட்டதையும் மருத்துவர் கண்டறிந்தார்.

மேலும் செய்திகளுக்கு..படுக்கைக்கு வந்த கள்ளக்காதலன்.. மகள்களுக்கு மது ஊத்திக்கொடுத்து ‘என்ஜாய்’ பண்ண சொன்ன தாய்

மருத்துவமனை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பெண் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூற, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் குழந்தை கொல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால் குழந்தை எதற்காக கொல்லப்பட்டது என்பது தெரியவில்லை. பெண் கர்ப்பமாக இருப்பது கணவருக்கு தெரியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகத்தின் பேரில் அப்பகுதி தூய்மை பணியாளர்கள் வீட்டுக்கு கடந்த நாள் வந்தபோது, ​​தான் கர்ப்பமாக இல்லை என்றும், உடல் எடை அதிகரிக்க மருந்து உட்கொண்டதால் உடலில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி

click me!