படிக்காதவன்கூட காதலா..? படுக்கையில் வைத்து மகளை துடிக்க துடிக்க கொன்ற தந்தை. புதுவகை ஆணவக்கொலை.

Published : Aug 12, 2022, 07:39 PM ISTUpdated : Aug 12, 2022, 07:45 PM IST
படிக்காதவன்கூட காதலா..?  படுக்கையில் வைத்து மகளை துடிக்க துடிக்க கொன்ற தந்தை. புதுவகை ஆணவக்கொலை.

சுருக்கம்

படிக்காத இளைஞனை காதலித்ததால்  அப் பெண்ணை அவரின் தந்தை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் சகோதர்கள் வாயில்  துணியை அடைத்து கழுத்தை நெறித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த கொலை நடந்துள்ளது.  

படிக்காத இளைஞனை காதலித்ததால்  அப் பெண்ணை அவரின் தந்தை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் சகோதர்கள் வாயில்  துணியை அடைத்து கழுத்தை நெறித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த கொலை நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை தற்கொலைகள் காதல், கள்ளக் காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகின்றன. கணவனோ, மனைவியோ தவறான பாதையில் செல்லும் போது ஒரு கட்டத்தில் அது கொலையில் போய் முடிந்து விடுகிறது. அதேபோல சாதி மாறி காதலிக்கும் போது குடும்பத்தாரால் காதலனோ அல்லது காதலில் ஈடுபடும் பெண்ணோகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பெரும்பாலும் காதலை மையமாக வைத்தே இது போன்ற ஆணவக் கொலைகள் அரங்கேறி வருகிறது.

இதையும் படியுங்கள்:  ஆபிஸ் தோழன் கூப்பிட்டதால் ஓட்டலுக்கு போன இளம் பெண்.. ஃபுல்லா மது குடிக்க வைத்து இரவெல்லாம் உல்லாசம்.

பெரும்பாலான ஆணவக்கொலைகள் சாதி  ஏற்றத்தாழ்வை மையமாக வைத்து நடக்கிறது. ஆனால் இங்கு படிப்பறிவு இல்லாதத இளைஞனை மகள் காதலித்ததால் தந்தையே அந்த பெண்ணை ஆணவ கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- 

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் [சிசாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.கே  கிராமத்தை சேர்ந்தவர் மங்க்ரா ஓரான், இவரது மகள் சரிதா, இவர் பண்டாராவில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு சயின்ஸ் குரூப் படித்து வருகிறார், இந்நிலையில் இந்த பெண் லோஹர்டகாவில் உள்ள பாந்தராவை சேர்ந்த  இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். மகளின் காதல் விவகாரம் சரிதாவின் குடும்பத்திற்கு தெரிந்தது, அந்தப் பெண் காதலிக்கும் இளைஞன் படிப்பறிவு இல்லாதவர் என தெரியவந்தது.

இதையும் படியுங்கள்:  படுக்கைக்கு வந்த கள்ளக்காதலன்.. மகள்களுக்கு மது ஊத்திக்கொடுத்து ‘என்ஜாய்’ பண்ண சொன்ன தாய்

இதனால் சரிதாவின் குடும்பம் அவரின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படிபறிவு இல்லாதவனை காதலிப்பதா? கூடாது என அந்த பெண்ணை எச்சரித்தனர். ஆனால் அந்த பெண் அந்த இளைஞனை அடிக்கடி சந்தித்து வந்தார், இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மற்றும் சரிதாவின் சகோதரர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு சரிதாவின் வாயில் துணியை திணித்த்துடன், கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரின் உடலை அருகில் இருந்த ஆற்றில் வீசினர்.

ஆனால் ஒரு வாரத்தில் ஆற்றில் துர்நாற்றம் வீசியது, கிராம மக்கள் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றினர், சரிதாவின் சடலம்  என்பது தெரிந்தது, பின்னர் அவரின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். முதலில் போலீசாரை திசை திரும்ப வகையில் பேசினார், ஆனால் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி