நீச்சல் உடையில் பெண் பேராசிரியை.. இன்ஸ்டாகிராமில் சர்ச்சை படம் - கொதித்தெழுந்த மாணவர்கள் !

By Raghupati RFirst Published Aug 12, 2022, 4:48 PM IST
Highlights

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 

2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தனியாருக்கு சொந்தமானது. மிகவும் புகழ்பெற்ற கல்லூரியான அதில் தற்போது ஆசிரியர் ஒருவருக்காக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை பேராசிரியர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டதே இதற்கு மிக முக்கிய காரணமாகும்.

 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசிரியர் பதிவிட்ட  அந்த பதிவை தன் மகன் அந்த போட்டோவை செல்போனில் பார்த்துக் கொண்டிருந்ததை கண்ட தந்தை ஒருவர் ஒரு ஆசிரியர் இப்படி செய்யலாமா?என்று அவன் அளித்த புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அவரை கல்லூரியை விட்டு நீக்கி இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“ஒரு வாசகம், திருவாசகம்..” ரஜினி ஸ்டைலில் பன்ச் அடித்த செல்லூர் ராஜு - ரசிகர்கள் குஷி !

இதுகுறித்து பேசிய அந்த பெண் ஆசிரியர் ஒருவர், பல்கலைக்கழக அதிகாரிகள் தன்னை பணியை விட்டு போகும்படி, கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது 'பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும்' என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட 30 வயதான பேராசிரியை கூறியுள்ளார். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் பேசிய அவர், இரண்டு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியையான, தன்னை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது, பெரும் பாலியல் துன்புறுத்தல் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்றும் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். அனைத்து குற்றச்சாட்டுகளையும் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. உதவி பேராசிரியை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..படுக்கைக்கு வந்த கள்ளக்காதலன்.. மகள்களுக்கு மது ஊத்திக்கொடுத்து ‘என்ஜாய்’ பண்ண சொன்ன தாய்

click me!