ஹாய் நான் ஷிவானி... என்னை நிர்வாணமா பாக்க ஆசை இல்லையா..? ஒட்டு துணி இல்லாமல் வீடியோ காலில் வந்த பெண்.

Published : Aug 12, 2022, 09:08 PM ISTUpdated : Aug 12, 2022, 09:14 PM IST
 ஹாய் நான் ஷிவானி... என்னை நிர்வாணமா பாக்க ஆசை இல்லையா..? ஒட்டு துணி இல்லாமல் வீடியோ காலில் வந்த பெண்.

சுருக்கம்

ஒரு பெண் வீடியோ காலில் நிர்வாணமாக வந்து பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கறிஞர் ஒருவர் சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார். தனக்கு பல முறை வீடியோ கால் செய்த அந்த பெண் தன்னை நிர்வாணமாக பார்க்க விருப்பம் இல்லையா என குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரத்தையும் அவர் போலீசில் கொடுத்துள்ளார்.

ஒரு பெண் வீடியோ காலில் நிர்வாணமாக வந்து பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கறிஞர் ஒருவர் சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார்.
தனக்கு பல முறை வீடியோ கால் செய்த அந்த பெண் தன்னை நிர்வாணமாக பார்க்க விருப்பம் இல்லையா என குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரத்தையும் அவர் போலீசில் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. வங்கி விவரங்களை திருடி பணம் பறிப்பது, மேட்ரிமோனி என்ற பெயரில் கடலைபோட்டு பணத்தை சுருட்டுவது, நிர்வாண வீடியோ கால் செய்து பின்னர் அதை பதவுசெய்து பணம் கேட்டு மிரட்டுவது போன்ற பல வகைகளில் சைபர் கிரைம் குற்றங்கள் நடந்து வருகிறது. இந்த வரிசையில் ஒரு இளம்பெண், வழக்கறிஞர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தன்னை நிர்வாணமாக பார்க்கலாம் என மெசேஜ்  அனுப்பியதுடன் அடுத்தடுத்து நிர்வாண வீடியோ கால் செய்து பின்னர் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: நடிகை அனுஷ்காவைபோல அவதாரம் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவன்.. அருந்ததி படத்தை பார்த்து தீக்குளித்த கொடூரம்.

முழு விவரம் பின்வருமாறு:- அடிலாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தான் வழக்கறிஞராக இருந்து வருவதாகவும் இந்நிலையில் தனது தொலைபேசிக்கு  ஒரு புதிய எண்ணில் இருந்து மெசேஜ் வந்ததாகவும், அதில் Hai Iam Shivani என அறிமுகம் செய்த அந்தப் பெண், திடீரென வாட்ஸ்அப் வீடியோ காலில் வந்து நிர்வாணமாக போஸ் கொடுத்ததாகவும், பின்னர் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தான் அந்த இணைப்பைத் துண்டித்து விட்டதாகவும், அதன் பிறகு அந்த பெண், ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லையா என கேட்டு அடுத்தடுத்து வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக வந்ததாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஆபிஸ் தோழன் கூப்பிட்டதால் ஓட்டலுக்கு போன இளம் பெண்.. ஃபுல்லா மது குடிக்க வைத்து இரவெல்லாம் உல்லாசம்.

இதில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட தான், இணைப்பை துண்டித்து விட்டு நான் ஒரு வழக்கறிஞர், இதுபோன்று நடந்து கொண்டால் வழக்குத் தொடுப்பேன் என எச்சரித்ததால் வேறொரு நபரிடம் இருந்து அழைப்பு வந்தது அந்த பெண்ணுடன் நிர்வாணமாக பேசிய வீடியோ தங்களிடம் இருப்பதாக கூறிய அவர்கள் தன்னை பணம் கேட்டு மிரட்டியதாகவும், வீடியோ மற்றும் அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வோம் என்று தன்னை அவர்கள் மிரட்டியதாகவும் அந்த வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தங்களது உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்றும் அவர்கள் மிரட்டியதாக மேலும் அவர் கூறியுள்ளார்.

இதை அப்படியே விட்டால் இது போன்ற சைபர் மோசடிகளில் அதிக இளைஞர்கள் ஏமாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவே இதை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் போலீசார்  அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளைஞர்களை குறிவைத்து நிர்வாண வீடியோக்கள், ஆன்லைன் மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?
கதறிய மாமியார்.. விடாத மருமகன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்