மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியை கொன்று புதைத்து விட்டு, கள்ளக்காதலனுடன் மனைவி ஓடி விட்டதாக கூறி நாடகமாடி பிள்ளைகளையும், குடும்பத்தாரையும் நம்ப வைத்து வாழ்ந்து வந்த கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள வைப்பின் என்னும் பகுதியை சார்ந்தவர் சஜீவன்.இவரது மனைவி ரம்யா இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இவரது மனைவி ரம்யா கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென மாயமாகியுள்ளார். இதை அடுத்து ஆறு மாதங்களுக்கு பின்பு கணவன் சஜீவன் - ஞாறக்கல் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்றும் புகார் அளித்துள்ளார்.
நேபாளத்தில் எட்டி விமானம் விபத்து: 29 உடல்கள் மீட்பு!
கேரளாவை உலுக்கிய நரபலி சம்பவத்திற்கு பின்பு கேரள போலீசார் மாயமாகியுள்ள பெண்களை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.இந்த விசாரணையில் தான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மனைவியை,சந்தேகத்தின் பெயரில் கொன்று புதைத்து விட்டு சஜீவன் நாடகமாடியதும் தெரிய வந்தது.
டாப் டிரெண்டிங்கில் பொங்கல்: உலக தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
சஜீவன் தனது மனைவி ரம்யா மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையில் அவ்வப்போது தகராறும் நடந்து வந்துள்ளது .இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது மனைவியான ரம்யாவுக்கு செல்போனில் வந்த ஒரு அழைப்பை காரணம் காட்டி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.தகராறு முற்றவும் மனைவியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார்.மதியம் 2 மணி அளவில் நடந்த இந்த கொலைக்கு பின்பு,யாருக்கும் தெரியாமல் இருக்க இரவு 10 மணி வரை காத்திருந்து தனது வீட்டின் முன் பகுதியில் அவரது மனைவி ரம்யாவின் உடலை புதைத்துள்ளார்.
Narendra Modi: யாரும் சாதிக்க முடியாததை சாதித்தவர் மோடி: பாகிஸ்தான் எழுத்தாளர் புகழாரம்
பின்பு எப்போதும் போல் சகஜமாக நாடகமாடி வாழ்ந்து வந்த சஜீவன் முதலில், தனது மனைவி பெங்களூரில் படிக்க சென்று இருப்பதாக கூறி முதலில் வீட்டாரையும் பிள்ளைகளையும் நம்ப வைத்துள்ளார்.பின்பு பாம்பேயில் அழகு கலை படிப்பிற்காக சென்றிருக்கிறார் எனவும் நம்ப வைத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் குடும்பத்தாரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாம்பேயில் ஒருவருடன் காதல் வயப்பட்டு தங்களை விட்டு விட்டு அவருடன் சென்றுவிட்டார் என்றும் கதை கட்டியுள்ளார் சஜீவன்.
இந்த கதைகளை நம்பிய வீட்டாரும் ,பிள்ளைகளும் இவர் மீது எந்தவித சந்தேகமும் அடையாமல் -பொதுமக்களிடையிலும் மனைவி விட்டு சென்ற பின்பு தனது குழந்தைகளை நன்றாக பார்க்கும் தகப்பன் என்ற நிலையில் நடித்தும் வந்துள்ளார்.இதனால் இவர் மீது எந்த சந்தேகமும் எவருக்கும் எழவில்லை.
Banavathu Tejaswee: ஆந்திர பெண் டாக்டருக்கு பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்
இதை உறுதிப்படுத்துவதற்காக மனைவியை கொன்று புதைத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு எதுவும் தெரியாதது போல் மனைவியை காணவில்லை என ஞாறக்கல் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.இவருடன் நடத்தப்பட்ட விசாரணையில் இவரது நடிப்பை நம்பிய போலீசார் ,இவர் மீது சந்தேகம் கொள்ளாமல் ரம்யாவை பல இடங்களிலும் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் கேரளாவை உலுக்கிய நரபலி சம்பவம் நடைபெற்ற பின்பு காணாமல் போன பெண்கள் குறித்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.அப்போது போலீசாருக்கு எழுந்த ஒரு சில சந்தேகத்தால் கணவன் சஜீவனிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். முதலில் தனது நடிப்பு திறமையால் தப்பித்துக் கொண்ட சஜீவன் ஒரு கட்டத்தில் போலீசார் கேள்விகளுக்கு விடையளிக்க திணறிய பின்பு நடந்த உண்மைகளை போலீசாரிடம் தெரிவித்தார்.
தனது மனைவி மீது இருந்த சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறு முற்றி மனைவி கழுத்தில் கயிற்றால் இறுக்கி மூச்சு முட்ட செய்து கொன்றதும் பின்பு யாருக்கும் தெரியாமல் வீட்டு வளாகத்துக்குள்ளையே காத்திருந்து புதைத்ததும் ஒப்புக்கொண்டார். இவரது வாக்குமூலத்தை தொடர்ந்து அங்கு சோதனை செய்த போலீசாருக்கு மண்டை ஓடும் எலும்புக்கூடுகளும் கிடைத்தன. பரிசோதனைக்கு பின்பு இவர் செய்த கொலை செய்ததும் உறுதியானது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலும் அடைத்துள்ளனர்.
ஒன்றரை வருடங்களாக குடும்பத்தாரையும், நாட்டாரையும் பிள்ளைகளையும் ஒரு போல ஏமாற்றி நம்ப வைத்து- நாடகமாடிய கொலையாளி கணவன் திடீரென கைது செய்யப்பட்டது .கேரளாவிலும் ,அப்பகுதி ஊர் மக்களுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.