தூத்துக்குடியில் வரதட்சணைக்காக பெண் கொலை? காவல் துறையினர் விசாரணை

Published : Jan 14, 2023, 04:15 PM ISTUpdated : Jan 14, 2023, 04:16 PM IST
தூத்துக்குடியில் வரதட்சணைக்காக பெண் கொலை? காவல் துறையினர் விசாரணை

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணமான ஒரே ஆண்டில் வரதட்சணை காரணமாக இளம் பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் கொலை செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு எம்பரர் பகுதியை சேர்ந்தவர் அனிஷா, பட்டதாரரியான அனுஷாவிற்கும் தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த குவைத்தில் வேலை செய்யும் பிரசாத் என்பவருக்கும் கடந்த 2022 ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்காக பிரசாத் அவரது குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் 100 பவுன் நகை மற்றும் நான்கு லட்ச ரொக்கம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கில்பர்ட் தனது மகளுக்கு 70 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மீதி 30 பவுன் நகையை சில மாதங்களில் போடுவதாக கூறியுள்ளார்.

ஆனால், கூறியபடி நகையை முறையாக போடாததால் அனிஷாவை பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அனிஷாவை கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டிற்கு அனுப்பாமலும் இருந்துள்ளனர். செல்போனில் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியாதபடி செல்போனை லாக் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அனிஷாவிற்கு பிரசாத்தின் குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும் அனிஷாவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கோவில்பட்டியில் உதவி ஆய்வாளருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்

குவைத்தில் வேலை பார்க்கும் பிரசாத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது மனைவியிடம் மீண்டும் நகை, பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அணிசாவின் தந்தை கில் பட்டிருக்கு  பிரசாத்  போன் மூலம் உங்களது மகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். 

இதை அடுத்து மருத்துவமனைக்கு கில்பர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கே உங்களது மகள் இறந்து விட்டால் என பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மகளை இழந்த கில்பர்ட் தனது மகளை வரதட்சணை கொடுமை காரணமாக பிரசாத் மற்றும் அவரது தந்தை, தாய் மற்றும் குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக தென்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருச்சியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்

இதை அடுத்து தென்பாகம் காவல்துறையினர் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ளதால் தூத்துக்குடி ஆர்டிஓ இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தூத்துக்குடியில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!