ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சக்தி (35). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவரது மனைவி நந்தினி (25) இவர்களுக்கு பிரவீன் (7) மற்றும் ஜெகன்நாதன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சக்தி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சக்தி (35). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவரது மனைவி நந்தினி (25) இவர்களுக்கு பிரவீன் (7) மற்றும் ஜெகன்நாதன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சக்தி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து, நந்தினிக்கும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க;- காதலியை ஆசை தீர அனுபவித்துவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!
இதனையடுத்து, கணவர், மனைவி போல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நந்தினி தனது இளைய மகன் ஜெகன்நாதனை தன்னோடு வளர்த்து வந்த நிலையில் மூத்த மகன் பிரவீனை வெளியூரில் தங்கி படிக்க வைத்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி ரஞ்சித் நந்தினியுடன் உல்லாசமாக இருந்த போது இடையூறு ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித் குழந்தை என்று கூட பாராமல் ரஞ்சித் பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.
இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்! வீடியோ எடுத்து மிரட்டி சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற வாத்தியார்
இதனையடுத்து இருவரும் குழந்தையை கடந்த டிசம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீட்டிலிருந்த குழந்தை டிசம்பர் 25ம் தேதி வாந்தி எடுத்த சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைத்துள்ளனர். எப்படியோ இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.