விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சிம்பு(19). ஆட்டோ ஓட்டுநர். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சிம்பு(19). ஆட்டோ ஓட்டுநர். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விஷயத்தை தனது நண்பர்களான சிவா(21), செல்வம்(19) ஆகியோரிடம் ஆட்டோ ஓட்டுநர் சிம்பு பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, நண்பர்களும் அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். முதலில் அதிர்ச்சியடைந்த காதலன் பின்னர் ஒப்புக்கொண்டார். நேற்று முன்தினம் வழக்கம் போல தனியாக சந்திக்கலாம் எனக்கூறி அந்த சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செஞ்சி ரோட்டில் உள்ள ராகவேந்திரா கார்டன் பின்புறம் சென்றுள்ளார். அப்போது, சிம்புவின் நண்பர்களை இருப்பதை கண்டு அந்த சிறுமி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், மிரட்டி வலுக்காட்டாயமாக மூவரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். அப்படி இருந்த போதிலும் நடந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமி கதறிய படி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிம்பு, சிவா, செல்வம் ஆகிய 3 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.