பெண் ஒருவர் தனது கள்ள காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரபிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ளது தகராபு வலசை என்ற ஊர். இங்குள்ள எம்பிடி காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் பைடி ராஜு என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. ஜோதியின் கணவர் பைடி ராஜு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.
இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?
திருமணத்திற்கு முன்பு ஜோதிக்கும், சுரு ராஜு என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் ஜோதி தனது காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.இதற்கென தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். வெளியூரில் வேலை இருப்பதாக கூறி அடிக்கடி கள்ளக்காதலனுடன் சந்தித்துள்ளார் ஜோதி.
ஒருகட்டத்தில் இந்த விவகாரம் ஜோதியின் கணவர் பைடி ராஜுக்கு தெரியவர, இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட, கணவரை கொல்ல ஏற்பாடு செய்தார் மனைவி ஜோதி. கள்ள காதலனுடன் போட்ட திட்டத்தின்படி உணவில் தூக்க மாத்திரை கலந்து மயக்கமடைய வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க..நாட்டு நாட்டு பாட்டுக்கு இவங்க ஆடியிருக்காங்களா.? ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா - வைரல் வீடியோ!
பிறகு கழுத்தை நெரித்து கொன்று, நாடகமாடியுள்ளனர். உடலை பின்பு யாருக்கும் தெரியாமல் எரித்து விட்டனர். யாருக்கும் தன்மேல் சந்தேகம் வராமல் இருக்க கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார். பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார் ஜோதி. பிறகு இதற்கு உடந்தையாக இருந்த கள்ள காதலனையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..சேது சமுத்திர திட்டத்தால் எந்த பயனும் இல்லை.. யாருக்கு பயன் தெரியுமா? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை