சேலம் அருகே இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய இரண்டு சிறை வார்டன்களை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய இரண்டு சிறை வார்டன்களை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சேலம் சிறை முன்பாக நின்றிருந்தபோது வார்டன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் நட்பாக பழகி வந்த நிலையில் அந்த வார்டன் திடீரென ஒரு நாள் தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க: திருச்சியில் 5 பவுன் நகைக்காக செவிலியர் கொலை; பெண் கைது
அங்கு காதலிப்பதாக ஆசை வார்த்த கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்தார். இதைப் பார்த்துவிட்ட இன்னொரு வார்டன் அங்கு வந்து, என்னை மிரட்டி தவறாக நடந்து கொண்டார். உல்லாசமாக இருக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டு, அந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டு மிரட்டி அடிக்கடி உல்லாசத்திற்கு அழைக்கின்றனர். எனவே அவர்களை கைது செய்து, ஆபாசமாக எடுத்த வீடியோ காட்சிகளை அழிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: காதலன் கண் முன் காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை… காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
இந்த புகாரின் பேரில் சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை சிறைவார்டன்கள் அருண் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரையும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளம் பெண்ணிடம் இருவரும் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.