காதலன் கண் முன் காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை… காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

By Narendran S  |  First Published Jan 13, 2023, 6:42 PM IST

காஞ்சிபுரம் அருகே சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த காதலன் கழுத்தில் கத்தி வைத்து அவருடன் இருந்த பெண்ணை மதுபோதையில் வந்த 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காஞ்சிபுரம் அருகே சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த காதலன் கழுத்தில் கத்தி வைத்து அவருடன் இருந்த பெண்ணை மதுபோதையில் வந்த 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் விப்பேடு கிராம பகுதியை ஒட்டிய வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை பகுதியில் ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தது. வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை புறவழிச்சாலை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளதால், இந்த சாலையை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள் உணவகங்கள், தனியார் பள்ளிகள், புதிய குடியிருப்பு பிளாட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆசைவார்த்தை கூறி உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி இளம்பெண்ணை சீரழித்த சிறை வார்டன்கள்.!

Latest Videos

அவ்வாறு இருக்கும் பிளாட் ஒன்றின் அருகே தான் இந்த காதல் ஜோடி நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மதுபோதையில் வந்த 4 இளைஞர்கள் காதலனை கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் 5 பவுன் நகைக்காக செவிலியர் கொலை; பெண் கைது

இதுக்குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்களை கைது செய்தனர். காதலின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அவருடன் வந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!