மகப்பேறு சிகிச்சைக்காக மனைவியுடன் சென்னை வந்த நகைக்கடை அதிபர்.. உடன் வந்த கார் டிரைவர் செய்த பயங்கர துரோகம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2021, 5:03 PM IST
Highlights

இது நாள் வரை அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை வரம் வேண்டி  எத்தனையோ மருத்துவமனை, கோயில் என சுற்றி வந்த அத்தம்பதியர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மகப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த தம்பதியிடம் கார் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தலைமறைவான கார் ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் சுமங்களி ஜூவல்லர்ஸ் நகை கடை நடத்தி வருபவர் அஹகமது இப்ராகிம் (44) இவருக்கும் கௌசியா பேகம் என்ற பெண்ணுக்கும் கடந்த இருபத்தி ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இதையும் படியுங்கள்:  சசிகலாவும் ஸ்டாலினும் கை கோர்த்துட்டாங்க.. அதிமுகவை வச்சு செய்ய முடிவு பண்ணிட்டாங்க.. கதறிய ஜெயக்குமார்.

இது நாள் வரை அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை வரம் வேண்டி  எத்தனையோ மருத்துவமனை, கோயில் என சுற்றி வந்த அத்தம்பதியர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அஹமது இப்ராஹிம் தனது மனைவியுடன் நேற்று தனது காரில் சென்னை வந்துள்ளார். இவர்களுக்கு உதவியாக அஹமதுவின் உறவினர் மகனான முகமது பாருக் என்பவர் காரை ஓட்டி வந்தார். அதற்கிடையில் சிகிச்சை முடித்து வெளியில் வந்த தம்பதியர், ஓட்டுநராக வந்த பாருக்குக்கு போன் செய்தனர், ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்: அதிமுக தொண்டர்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி. காலையிலேயே பரபரப்பு.!!

மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து 5 லட்சம் பணத்துடன் முகமது பாருக் காருடன் மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அகமது இப்ராஹிம் நடந்த சம்பவம் குறித்து சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சேத்துப்பட்டு போலீசார், 5 லட்சம் பணத்துடன் காரில் மாயமான முஹம்மத் பாருக்கை தேடி வருகின்றனர். அதற்கிடையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாருக் தஞ்சாவூரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை பிடிப்பதற்காக சென்னையில் இருந்து போலீசார் தஞ்சாவூர் விரைந்துள்ளனர்.
 

click me!