ஷூவுக்குள் மறைத்து வைத்த போதைப்பொருள்... ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைக்காதது ஏன் தெரியுமா..?

Published : Oct 21, 2021, 11:56 AM IST
ஷூவுக்குள் மறைத்து வைத்த போதைப்பொருள்... ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைக்காதது ஏன் தெரியுமா..?

சுருக்கம்

தங்கள் போதைப்பொருட்களை நுகர்ந்தது உண்மை. இன்பத்திற்காக அதனை பயன்படுத்த வைத்திருந்ததை வெளிப்படுத்தினர். 

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யா கானின் ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அக்டோபர் 26 ஆம் தேதி விசாரிக்கப் போவதாகக் கூறியது.

ஆர்யான் கானின் ஜாமீன் மனுவை அக்டோபர் 20 ஆம் தேதி நிராகரித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆர்யான் கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே, மனுவை தாக்கல் செய்தார். 

இதுகுறித்து சிறப்பு நீதிபதி வி.வி. பாட்டீல் கூறுகையில், “வாட்ஸ்அப் ஷாட்மூலம்  ஆரியன் கான் சட்டவிரோதமாக போதைப்பொருள்களை தொடர்ந்து கையாள்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. எனவே, அவர் ஜாமீனில் இருக்கும்போது இதேபோன்ற குற்றத்தைச் செய்ய வாய்ப்பில்லை என்று கூற முடியாது.

வழக்கின் நகல்களை ஆராய்ந்து பார்த்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 1 (ஆரிய கான்), 6 கிராம் போதைப்பொருள் வைத்துள்ளார். 2 (அர்பாஸ்) அவரது காலணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை ஒப்புக்கொண்டார். அவர்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் ஒன்றாக பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஒரு சர்வதேச கப்பல் முனையத்தில் ஒன்றாக கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் தங்களது ஒப்புதல் வாக்குமூலத்தில் ’’தங்கள் போதைப்பொருட்களை நுகர்ந்தது உண்மை. இன்பத்திற்காக அதனை பயன்படுத்த வைத்திருந்ததை வெளிப்படுத்தினர். இந்த விஷயங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காட்டும்’’எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு