பட்டப்பகலில் பயங்கரம்.. புதுமாப்பிள்ளை தலை துண்டித்து கொடூர கொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

Published : Oct 20, 2021, 05:58 PM IST
பட்டப்பகலில் பயங்கரம்.. புதுமாப்பிள்ளை தலை துண்டித்து கொடூர கொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமாரகிரி புதூர் காளிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்ய ராகவன் (31). எட்டயபுரத்தில் டி.வி. மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் புதுமாப்பிள்ளை தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமாரகிரி புதூர் காளிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்ய ராகவன் (31). எட்டயபுரத்தில் டி.வி. மெக்கானிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல இன்று காலை கடைக்கு சென்று வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சூர்ய ராகவன் மீது மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டினர். பின்னர், ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அவரின் தலையை துண்டித்து சிறிது தூரத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூர்ய ராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணத்தால் கொலை நடைபெற்றதா?  அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஜாரில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!