காதலுக்கு மட்டுமா? காமத்துக்கும் கண் இல்லடா சாமி. மரத்தில் கட்டிவைத்து 20 வயசு இளைஞனுடன் உடலுறவு. கொடூரன் கைது

By Ezhilarasan Babu  |  First Published Oct 20, 2021, 5:46 PM IST

அதாவது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கபாகா கிராமத்தைச் சேர்ந்த முகமது  ஹனிஃப் என்பவர் குடும்ப நண்பராக இருந்தார்,  ஹனிஃப் வாக்கிங் சென்றபோது அந்த இளைஞரை ரயில்வே டிராக் அருகே சந்தித்தார், ஏற்கனவே  ஹனிஃப்பை தனக்கு தெரியும் என்பதால், அந்த இளைஞனும் அவருடன் நடக்கத் தொடங்கினான். 


20 வயது இளைஞனை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வக்கிர சம்பவம் கர்நாடக மாநிலம்  தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்துள்ளது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள்.. ஆனால் காமத்துக்கும் அது இல்லவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு காமவெறி தலைக்கு ஏறிய ஒரு மனிதர், எதிரில் இருப்பது ஆணா, பெண்ணா என்ற விவஸ்தை கூட இல்லாமல், தனது காம இச்சையை இரு இளைஞனுடன் மூர்க்கத்தனமாக தீர்த்துக் கொண்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொத்தத்தில் இந்த சமூகத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் தனது காம இச்சைக்கு ஒத்துழைக்க மறுத்த 20 வயது இளைஞன் கொடூரமாக வெட்டப்பட்டு சம்பம் நிகழ்ந்துள்ள நிலையில், அதே கர்நாடக மாநிலத்தில் 20 வயது இளைஞர் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது, கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் புதூர் கபாகா என்ற கிராமத்தைச் சேர்ந்த (20) வயது இளைஞர் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் வாக்கிங் சென்றார். சிறிது நேரத்தில்  ஒருவித பதட்டத்துடனும், இனம்புரியாத பீதியுடனும், உடல் நடுக்கத்துடன் அந்த இளைஞர் வீடு திரும்பினார். அவரது ஆடைகள் சேறும் சகதியுமாக இருந்தது.  அந்த இளைஞனைப் பார்த்து பதறிய அவரது தந்தை, என்ன நடந்தது என்று கேட்டார், அந்த இளைஞர் கதறியபடியே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார். 

இதையும் படியுங்கள்: 24 மணி நேரத்தில் ஆதாரத்தை வெளியிடு.. இல்ல, பகிரங்க மன்னிப்பு கேள்.. அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு

அதாவது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கபாகா கிராமத்தைச் சேர்ந்த முகமது  ஹனிஃப் என்பவர் குடும்ப நண்பராக இருந்தார்,  ஹனிஃப் வாக்கிங் சென்றபோது அந்த இளைஞரை ரயில்வே டிராக் அருகே சந்தித்தார், ஏற்கனவே  ஹனிஃப்பை தனக்கு தெரியும் என்பதால், அந்த இளைஞனும் அவருடன் நடக்கத் தொடங்கினான். அப்போது அந்த இளைஞன் மீது  ஹனிஃப்புக்கு ஒருவிதமான ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த இளைஞனுடன் எப்படியாவது உடலுறவுகொள்ள  வேண்டும் என முடிவு செய்தார். நீண்ட நேரமாக நடந்து கொண்டிருப்பதால் இளைப்பாற கரும்பு சாறு குடிக்கலாமா என இளைஞரிடம்  ஹனிஃப் கேட்டார். அதை நம்பி அந்த இளைஞரும் அவருடன் மறைவான பகுதிக்கு சென்றார். அப்போது திடீரென அந்த இளைஞனை புதருக்குள் இழுத்துச் சென்ற  ஹனிஃப், அந்த இளைஞனை மரத்தில் கட்டிவைத்து உடலுறவு கொண்டார். ஒருவழியாக பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டா ஹனிஃப்,  இது பற்றி யாரிடமாவது சொன்னால்  உன்னையும்,உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என  மிரட்டினார். 

பின்னர் அங்கிருந்து தப்பித்த அந்த இளைஞன், வீட்டுக்கு வந்து கதறியபடி நடந்தவற்றை தனது தந்தையிடம் கூற,பாதிக்கப்பட்டவரின் தந்தை இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் போலீசார் ஹனீஃப் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். குற்றவாளி மீது ஐசிபி 504, 323, 377 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக புதூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

click me!