நான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்யலாம்.. ஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக எடுத்த கொடூரம்.!

By vinoth kumar  |  First Published Oct 21, 2021, 4:26 PM IST

கேட்டரிங் பயிற்சி முடித்து திருவிழாக்களில் சமையல் வேலை செய்துள்ளார். அவரிடம் மகாலட்சுமி தான் சூரிய ராகவனை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஒரே  சமூகத்தைச் சேர்ந்த தன்னை காதலிக்காமல் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் இருவர் மீதும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.


எட்டயபுரம் அருகே டிவி மெக்கானிக்  தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் தூரிதமாக செய்யப்பட்டு குற்றவாளியை 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே குமாரகிரி புதூரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (31). டிவி பழுது பார்க்கும் கடை ஊழியர். இந்த கடை அருகே உள்ள டைப் இன்ஸ்டிடியூட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படர்ந்தபுளியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் மகாலட்சுமி பயிற்சி பெற்றுள்ளார். அப்போது சூரிய ராகவனுக்கும், மகாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.  இதுபோல் மகாலட்சுமியை சோழபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜிம் (22) ஒருதலையாய் காதலித்துள்ளார். அவர் கேட்டரிங் பயிற்சி முடித்து திருவிழாக்களில் சமையல் வேலை செய்துள்ளார். அவரிடம் மகாலட்சுமி தான் சூரிய ராகவனை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஒரே  சமூகத்தைச் சேர்ந்த தன்னை காதலிக்காமல் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் இருவர் மீதும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- 23 வயது இளைஞர் செய்யுற வேலையா இது.. ஆண்டிகள், இளம்பெண்கள் கரெக்ட் செய்து உல்லாசம்.. நிர்வாண வீடியோ..!

இந்நிலையில் சூரிய ராகவன் - மகாலட்சுமி காதல் இரு வீட்டாருக்கும் தெரியவரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.  இது ஆனந்தராஜிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த சூரிய ராகவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி பழுதான எல்.இ.டி. டிவி ஒன்றை சூரிய ராகவன் வேலை பார்க்கும் கடையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆனந்த்ராஜ் கொடுத்துள்ளார்.

தினமும் போன் செய்து டிவி சரி பார்த்தாச்சா என்று கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கேட்ட போது, சூரியராகவன் டிவி ரெடியாகி விட்டது என்றும் மறுநாள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து திட்டமிட்டபடி ஆனந்தராஜ், ஒரு பையில் ஆடு வெட்டும் கத்தி, மிளகாய் பொடி ஆகியவற்றுடன் வந்துள்ளார். கடையில் இருந்த சூரிய ராகவனிடம், நான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்யலாம் எனக்கூறி ஆனந்தராஜ் தகராறு செய்துள்ளார்.

இதையும் படிங்க;- தனியாக செல்லும் பெண்களின் அழகான, எடுப்பான மார்பகங்களை தொடும் இளைஞர்.. 100 பேரிடம் சில்மிஷம் செய்தது அம்பலம்.!

வாக்குவாதம் முற்றியதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த  மிளகாய் பொடியை சூரியராகவன் முகத்தில் வீசி, கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். முற்றவே தான் வைத்திருந்த மிளகாய் பொடியை சூரியராகவன் முகத்தில் வீசி, கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் தலையை அருகில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, போலீசார்  ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!