திருநங்கையுடன் பாலியல் இச்சைக்கு சென்ற கடைக்காரர்..கடைசியில் நடந்த விபரீத சம்பவம்

Published : Jul 12, 2022, 05:42 PM IST
திருநங்கையுடன் பாலியல் இச்சைக்கு சென்ற கடைக்காரர்..கடைசியில் நடந்த விபரீத சம்பவம்

சுருக்கம்

5க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(47). கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 9ம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கியதாக கூறி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார், சிகிச்சையில் இருந்த தர்மலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் போலீசார் சந்தேகமடைந்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த 8ஆம் தேதி இரவு தர்மலிங்கம், தன்னுடன் பணிபுரியும் பிரவீனுடன், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் திருநங்கை ஒருவருடன் பாலியல் இச்சைக்கு சென்றுள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

அப்போது அவர்கள் திருநங்கையுடன் மூர்க்கத்தனமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த திருநங்கைக்கும், அவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 5க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, பிரவீன் தப்பியோடிய நிலையில், தர்மலிங்கம் படுகாயம் அடைந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

இந்த நிலையில், தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனை அடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய கவுண்டம்பாளையத்தை சேர்ந்த திருநங்கைகள் ரேஷ்மிகா, மம்தா, கௌதமி, ஹர்னிகா, ரூபி ஆகியோரை கைது செய்தனர்.மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு.. முடக்கப்படும் அதிமுக வங்கி கணக்கு? வங்கிகளுக்கு மாறிமாறி கடிதம் எழுதிய ஓபிஎஸ், இபிஎஸ்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை