இந்தியாவையே அதிர வைத்த கேரள நரபலி.. அடுத்ததாக விருதுநகர் பெண் மாயம் - குவியும் புகார்கள் !

By Raghupati RFirst Published Oct 18, 2022, 5:11 PM IST
Highlights

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா மற்றும் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகவல் சிங் என்பவரின் வீட்டில் நரபலி கொடுக்கப்பட்டனர்.

கேரளாவில் நரபலி

இது தொடர்பாக முகமது ஷாபி, பகவல் சிங், லைலை ஆகியோரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கவல் சிங்கின் வீட்டில் மேலும் சிலர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் பகவல் சிங்கின் வீட்டில் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடத்தினர்.

கேரளாவை அதிர வைத்த சம்பவம் 

இதற்கு முன்னதாக ஷாபி, பகவல் சிங், லைலா ஆகியோரை போலீசார் கொச்சியில் இருந்து நரபலி சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த நரபலி கும்பலிடம் இருந்து 2 பெண்கள் மயிரிழையில் உயிர்தப்பியது தெரியவந்து உள்ளது.

பத்மாவுக்கும், ரோஸ்லிக்கும் முன்னதாக பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த லாட்டரி விற்கும் பெண் உள்பட 2 பெண்களை முகமது ஷாபி குறி வைத்திருந்தார்.  பத்தனம்திட்டா ஆனப்பாறை பகுதியை சேர்ந்த லாட்டரி விற்கும் பெண்ணை அணுகிய ஷாபி, ஒரு நாள் அவரிடமிருந்து மொத்தமாக லாட்டரியை விலைக்கு வாங்கி நட்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க..சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்

பெண்கள் படுகொலை

அதன் பிறகு தனக்குத் தெரிந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் மாதம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பகவல் சிங்கின் வீட்டுக்கு அந்தப் பெண்ணை முகமது ஷாபி அழைத்துச் சென்றுள்ளார்.  ஒரு நாள் அங்கு வேலை பார்த்ததற்கு பகவல் சிங் அந்த பெண்ணிற்கு ஆயிரம் ரூபாயை சம்பளம் கொடுத்து உள்ளார்.

மறுநாள் அந்த பெண் வேலைக்கு வந்த போது அங்குள்ள ஒரு அறைக்கு பகவல் சிங் அந்தப் பெண்ணை அழைத்து உள்ளார். அவர் அறைக்குள் நுழைந்தவுடன், சில சோதனைகள் நடத்த வேண்டும் என்று கூறி அங்குள்ள கட்டிலில் படுக்குமாறு கூறி உள்ளார். அந்தப் பெண் கட்டிலில் படுத்தவுடன் ஷாபி, லைலா ஆகியோர் சேர்ந்து அவரை கட்டிப் போட முயன்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்து அலறியடித்தபடி தப்பி வெளியே ஓடினார்.

விருதுநகர் பெண் காணவில்லை

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ‘சம்பத் என்ற பாதிரியார் ஐந்து மாதங்களுக்கு முன் ராஜபாளையத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளார். சம்பத் அந்த நபரின் மனைவி அர்ச்சனா யெட்வியை (27) சந்தித்தார். 

இதையும் படிங்க..13 வயது சிறுவனுடன் தேனிலவு கொண்டாடிய பெண் ஆசிரியை.. எல்லாம் எதற்கு தெரியுமா ?

அவரது இரண்டு குழந்தைகளை விட்டு வெளியேறும்படி தூண்டியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசில் அளித்த புகாரின் பேரில், அந்த பெண்ணை கண்டுபிடித்து அவரது உறவினர்களிடம் அழைத்து வந்தனர். ஆனால், மறுநாளே, அந்தப் பெண் மீண்டும் பாதிரியாரிடம் திரும்புவதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். அதுமட்டுமல்லாமல், 19 சவரன் நகையுடன் சென்றுள்ளார்.

பாதிரியாருடன் சென்ற மனைவி

அந்த பெண்ணை நம்ப வைக்க போலீஸ் ஜீப் முன் நிற்கும் படத்தை சம்பத் அளித்ததாக மதுரபாண்டியன் கூறினார். தான் கேரளாவில் உள்ள கொல்லம் என்ற பகுதியார் சார்ந்தவர் என்று கூறியுள்ளார். அர்ச்சனாவிடம் இருந்து தங்கத்தை பறித்து சம்பத் அவளது உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடுவார் என்று புகார் அளித்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கணவர் புகார்

அர்ச்சனா படித்த பெண் ஆவார். பாலிடெக்னிக் கல்லூரியில் பிஎட் மற்றும் எம்ஏ படிப்புகளை படித்துள்ளார். அர்ச்சனாவும், மதுரபாண்டியனும் காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளதால், இவரும் இதுபோன்று எதாவது ஆபத்தில் சிக்கியிருப்பாரோ என்று புகாரை கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க..‘டிசம்பர் 4’ ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபக்.. ஆறுமுகசாமி ஆணையம் கிளப்பிய புது சர்ச்சை

click me!