மிஸ்டு காலில் உருவான கள்ளக்காதல்! புருஷன், பசங்களை உதறி தள்ளிவிட்டு சென்ற பெண்ணின் நிலைமையை பார்த்தீங்களா.?

By vinoth kumar  |  First Published Oct 18, 2022, 1:53 PM IST

கணவர், மகன்களை உதறி தள்ளிவிட்டு உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு வந்த கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.


கணவர், மகன்களை உதறி தள்ளிவிட்டு உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு வந்த கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
 
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(36). லாரி டிரைவர். இவரது மனைவி மலர்(30) இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவருக்கும், சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பார்த்தசாரதி என்பவரின் மனைவி நதியா (32). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இதையும் படிங்க;- மருமகள் கண்முன்னே நிர்வாணம்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா குழந்தையும் சொத்து தருகிறேன் கூறி மாமனார் சில்மிஷம்.!

Tap to resize

Latest Videos

இந்நிலையில், செல்போன் இருந்து தவறுதலாக சென்ற அழைப்பின் மூலம் அவருக்கும், நதியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. லாரி டிரைவர் தங்கராஜ், அடிக்கடி சென்னைக்கு  செல்லும் போது நதியாவை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவர்களது விவகாரம் நாளடைவில் நதியாவின் கணவர் பார்த்தசாரதிக்கு தெரியவந்ததையடுத்து கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நதியா அவரது கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு கண்ணக்குருக்கை கிராமத்தில் உள்ள தங்கராஜியின் வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவர் தங்கராஜியிடம், நான் இனிமேல் உன்னோடு தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். கணவர் வேறொரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜின் மனைவி மலர் இருவரையும் உள்ளே அனுமதிக்காமல் தகராறு செய்து உள்ளார். மேலும் வேதனை அடைந்த நதியா தற்கொலை செய்து கொள்வதாக அங்கிருந்து சென்றார்.

பின்னர் தங்கராஜ் அவரை சமாதானம் செய்ய மலை குன்று பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது தங்கராஜிக்கும், நதியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், நதியாவை அவரது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அப்போது, கிராம மக்கள் வருவதை பார்த்து, மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உடனடியாக, பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மகன்களை உதறிவிட்டு திருவண்ணாமலைக்கு வந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க;- நான் லீவுல இருக்கேன்.. வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்கிட்டு போ.. விதவை பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த விஏஓ.!

click me!