பிராங்க் வீடியோ யூடியூப்பர்களுக்கு வச்சாங்க பாரு ஆப்பு.. விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப் பிரிவு சம்மன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2022, 4:29 PM IST
Highlights

பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொதுமக்களை பெண்களைத் துன்புறுத்தும் யூடியூப் உரிமையாளர்கள் வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.  இது பிராங்க் வீடியோ யூடியூப்பர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொதுமக்களை பெண்களைத் துன்புறுத்தும் யூடியூப் உரிமையாளர்கள் வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.  இது பிராங்க் வீடியோ யூடியூப்பர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் தொலைக்காட்சிகள் மட்டுமே மக்களுக்கான பிரச்சினைகளை பேசி வந்த நிலையில், இப்போது சமூக வலைதளங்கள் அதாவது யூடியூப் சேனல்கள் அதிக அளவில் மக்கள் பிரச்சினைகளையும் கேயில் எடுத்து பேசத் தொடங்கியுள்ளன. இது ஒருவகையில் வரவேற்கப்பட்ட விஷயமாக இருந்தாலும் மறுபுறம் சில யூடியூப் சேனல்கள் பிராங்க் என்ற பெயரில் பொதுமக்களை பெண்களை அதிகம் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. யூடியூப் சேனல்கள் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பொது இடத்தில் பெண்களை மனரீதியான விளையாடி அவர்களை காயப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:  நன்னெறி கல்வி இல்லாதது தான் இதுப்போன்ற பிரச்சனைக்கு காரணம்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு கருத்து

எனவே ப்ராங்க் வீடியோ போடும் யூடியூப் சேனல்களை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வரிசையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை எடுத்து யூடியூப் சேனலில் பதிவிட்டு வருவதாக காவல் துறைக்கு புகார் வந்துள்ளது. குறிப்பாக கட்டெறும்பு,  ஆரஞ்சு மிட்டாய், குல்பி, ஜெய் மணிவேல்,  நாகை  360 உள்ளிட்ட சேனல்கள் முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி ரோகித் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். 

இதையும் படியுங்கள்: ஆர்எஸ்எஸ் க்கு வழங்கிய அனுமதியை மறுஆய்வு செய்ய முடியாது.. திருமாவளவன் மனுவை தூக்கி ஓரம் போட்ட நீதிமன்றம்.

அந்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ரோகித்தை அழைத்து விசாரித்தனர். அந்த விசாரணைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொதுமக்களின் பெண்களை துன்புறுத்தும் வகையில் ஐந்துக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் செயல்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன், அந்த அடிப்படையில் என்னை அழைத்து விசாரித்தனர். நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து தான் குற்றம் சாட்டியது யூட்யூப் சேனல்களின் உரிமையாளர்களை வரும் 20ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், யூடியூப் சேனல்கள் மீது புகார் கொடுத்ததை தொடர்ந்து தெரியாத எண்களில் இருந்து தொடர்ச்சியாக தனக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும் அதில் பேசிய நபர்கள், மற்றவர்கள் எல்லோரும் அமைதியாக இருக்கும்போது உனக்கு மட்டும் என்ன எனக் கேட்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் முதியவர்கள் பெரியவர்களை அச்சுறுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்கள் எடுத்து வெளியிடுவதை சம்பந்தப்பட்ட யூடியூப்பர்கள் கைவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  

 

click me!