தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கு.. ஒருவர் கைது.. குற்றவாளியை நெருங்கிய தமிழக போலீஸ்?

By vinoth kumarFirst Published Feb 16, 2023, 8:48 AM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளை கும்பல் சித்தூர் வழியாக ஆந்திர மாநிலம் சென்று கர்நாடக மாநிலத்தில் கோலார் கேஜிஎப் பகுதியில் தங்கி மறுநாள் தான் வெளிமாநிலத்ததிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம்களில் கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபரை பெங்களூருவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவில் மாரியம்மன் கோயில் 10-வது வீதியில் உள்ள  எஸ்.பி.ஐ ஏடிஎம், தேனிமலை பகுதியில்  எஸ்.பி.ஐ ஏடிஎம், போளூர் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் செல்லும் பாதையில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம், கலசப்பாக்கத்தில் உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் உள்ளிட்ட 4 இடங்களில்  காஸ் வெல்டிங் மூலம் உடைத்து  ரூ.73 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க;- தி.மலையில் ஆளுங்கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்..!

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளை கும்பல் சித்தூர் வழியாக ஆந்திர மாநிலம் சென்று கர்நாடக மாநிலத்தில் கோலார் கேஜிஎப் பகுதியில் தங்கி மறுநாள் தான் வெளிமாநிலத்ததிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. 

இதையும் படிங்க;-  கள்ளக்காதலுக்கு இடையூறு.. ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிய மனைவி.. வாண்டடா வந்து சிக்கி பலியான நண்பன்..!

இதுதொடர்பாக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து தப்பி செல்ல உதவிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை திருவண்ணாமலை அழைத்து வந்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கியமான 2 ஹார்ட் டிஸ்க்குகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். நன்றாக தொழில்நுட்பம் தெரிந்த குழுவினர் அலாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருப்பதால், பழைய வழக்குகளையும் புலனாய்வு செய்தும் வருகின்றனர். 

இதையும் படிங்க;-   ஏடிஎம் இயந்திரம் பத்தி நல்ல தெரிஞ்சவங்க தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்காங்க.. ஐஜி கண்ணன் பகீர்.!

click me!