கினியா நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கினியா நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடீஸ் அபாபா நகரில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கினியா நாட்டைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்ததில், அவர் கொண்டு வந்திருந்த பெட்டியில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதையும் படிங்க: எனக்கு கல்யாணம் வேண்டாம்பா.? பயத்தில் சாணிப்பவுடரை குடித்த கல்லூரி மாணவி - கடைசியில் ஏற்பட்ட திருப்பம்
அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அதனை ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்தனர். அப்போது, அது அம்பெட்டமின் எனப்படும் வெளிநாட்டு போதை பொருள் என்பதும் அதன் எடை ஒரு கிலோ 539 கிராம் என்பதும் தெரியவந்தது. மேலும் அதன் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து கினியா நாட்டைச் சேர்ந்த அந்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
இதையும் படிங்க: சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; மகிளா நீதிமன்றம் அதிரடி
அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் இதேபோல் இந்தியாவுக்கு வந்து சென்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் இதுவரை எத்தனை முறை போதை பொருளை இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வந்துள்ளார்? சென்னையில் இவர் யாரிடம் இந்த போதை பொருளை கொடுக்க கொண்டு வந்தார்? சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த நபர் சென்னையில் யார் இருக்கிறார்? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.