பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவர்களது வீட்டில், பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவி எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த கவுண்டர் மில்ஸ் பகுதியில், உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தவர், 20 வயதான ஸ்ரீ வர்ஷா.இவர், நேற்று கல்லூரியில் உள்ள கழிப்பறையில் சாணிபவுடர் குடித்து வாந்தி எடுத்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனை கண்ட சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவியை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையும் படிங்க..Coimbatore : கோவை கொலை சம்பவம்.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ் - பரபரப்பு நிமிடங்கள் !!
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீ வர்ஷாவின், விருப்பத்திற்கு மாறாக அவர்களது வீட்டில், பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி ஸ்ரீ வர்ஷா, நேற்று கல்லூரி வாளகத்தில், சாணிபவுடர் என்ற விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும், துடியலூர் காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!