தங்களுக்கு கொரியர் வந்திருப்பதாகவும், தெருவில் நாய்கள் உள்ளதாகவும் வீடு அமைந்துள்ள தெருவின் கார்னருக்கு பகுதிக்கு வந்து பெற்றுக் கொள்ளும் படி செல்போனில் பேசிய நபர் கூறியுள்ளார்.
கொரியர் கொடுப்பது போன்று வந்து பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை புதூர் தில்லை நகரில் வசித்து வருபவர் மோதிலால். சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (40). பேஷன் டிசைனராக உள்ளார். இந்நிலையில், தங்களுக்கு கொரியர் வந்திருப்பதாகவும், தெருவில் நாய்கள் உள்ளதாகவும் வீடு அமைந்துள்ள தெருவின் கார்னருக்கு பகுதிக்கு வந்து பெற்றுக் கொள்ளும் படி செல்போனில் பேசிய நபர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- தலைக்கேறிய காமம்? நண்பனின் மனைவியை வெட்டிவிட்டு 2 குழந்தைகளும் கொடூர கொலை செய்த இளைஞர்..!
இதனை நம்பி வீட்டிற்கு வெளியே சென்று கொரியர் வாங்க சென்றுள்ளார். கொரியர் பெற்ற அடுத்த வினாடியே எதிர்பாராத விதமாக கொரியர் கொடுத்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கீதாவின் தோள்பட்டையில் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் அலறிய படி சரிந்த சங்கீதாவை மீட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க;- நைட்டானாவே போதையில் வந்து ஒரே டார்ச்சர்.. வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தில் கணவனை போட்டு தள்ளிய மனைவி..!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முதலில், நகை பறிப்பில் ஈடுபட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாக தகவல் பரவிய நிலையில், பின் சங்கீதாவை தாக்கவே திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்து, கையில் கிளவுஸ் அணிந்து வந்ததாகவும், அந்த அடையாளம் தெரியாத நபர் அந்த பகுதியில் உள்ள வாட்ச்மேன் ஒருவரிடம் போன் வாங்கி பேசியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில் குனியமுத்தூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு.. கறி விருந்துக்கு அழைத்து நண்பனின் கதையை முடித்த கள்ளக்காதலன்.. வெளியான பகீர் தகவல்.!