தலைக்கேறிய காமம்? நண்பனின் மனைவியை வெட்டிவிட்டு 2 குழந்தைகளும் கொடூர கொலை செய்த இளைஞர்..!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த ஜவுளி தொழிலாளி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவருடன், அசாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவரும் வேலை செய்து வருகிறார். துவர்க்கா பாருக்கு சுமிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருவள்ளூர் அருகே நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, அந்த பெண்யைும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய வடமாநில இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த ஜவுளி தொழிலாளி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவருடன், அசாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவரும் வேலை செய்து வருகிறார். துவர்க்கா பாருக்கு சுமிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமிதாவுக்கும், குட்டுலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த துவர்க்கா பார் தனது மனைவி, குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர்கள் குட்டுலு வீட்டிற்கு சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து, மனைவி, குழந்தைகளை தேடி குட்டுலு வீட்டுக்கு சென்ற போது வீடு வெளிபுறமாக பூட்டப்பட்டிருந்து. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டு கிடந்ததும், மனைவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்தத சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுமிதாவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த குழந்தைகள் சிவா (4), ரீமா (1) ஆகிய இரண்டு சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள குட்டுலுவை தேடி வருகின்றனர்.