தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம்; கடிதம் எழுதி வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை

By Velmurugan s  |  First Published Feb 15, 2023, 10:32 AM IST

ராணிபேட்டை மாவட்டத்தில் தொழிலாளியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரவு பகலாக சக பணியாளர்கள் போராட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு பகுதியில் டிராக்டர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் கடந்த 10 ஆண்டுகாலமாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி மோகன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை மேற்கொண்ட திருவலம் காவல் துறையினர் தற்கொலை செய்வதற்கு முன்பாக மோகன் தனது கையால் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். 

அந்த கடிதத்தில் கூறியிருப்பது தனது தொழிற்சாலையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் ராஜீவன், பாலா, பிரசன்ன குல்கர்னி ஆகியோர் தன்னை தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும், தனது தற்கொலைக்கு மூவருமே காரணம் என்று எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

திருமணமான ஒரே ஆண்டில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை; காவல் துறையினர் விசாரணை

இதனை அடுத்து தொழிலாளியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லாமல் கருப்பு கொடி அணிந்தவாறு இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் தொழிலாளியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக தொழிலாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக தொழிற்சாலை வளாகத்தின் வெளியே சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

click me!