டீச்சரை நிர்வாணமாக வீடியோ எடுத்து டீச்சருக்கே வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய மாணவன்... நாளுக்கு நாள் நச்சரிக்கும் செக்ஸ் டார்ச்சர்!

By sathish kFirst Published Sep 9, 2018, 6:11 PM IST
Highlights

சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்... பள்ளி மாணவியுடன் ஆசிரியர் காதல் என்பது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணமாகாத ஆசிரியை மாலா பணிபுரிந்து 

வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டுள்ளான். 'மாலாக்கா ஐ லவ் யூ', 'மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க'  என்று கூறி ஆசிரியைக்கு சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளான். அதாவது காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்ப வந்துள்ளான்.

ஆனால், மாணவனின் இந்த சின்ன சின்ன குறும்புத்தனம் நாளடைவில் கோணல்புத்தியாக மாறிப்போனது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் அந்த மாணவன்.

மாணவனுக்கு அறிவுரை கூறி கண்டித்த அந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இதைத் தட்டிக்கேட்ட  ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.  அது மட்டுமல்லாமல் பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான். கடந்த 6 ஆம் தேதி அன்று இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான். 

இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான். இது குறித்து பெற்றோர் - ஆசிரியர் கழகம் மாணவன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர். 

இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.  இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு சினிமா, டிவி, செல்போன் போன்றவைகளே காரணம் என்று உளவியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறுகின்றனர்.

click me!