சித்திரைத் திருவிழாவைக் காண வந்த இளைஞர்கள், வைகை ஆற்றுக்குள் இரண்டு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். கத்தி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் விரட்டி விரட்டி தாக்கியது.
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பட்டாக் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பச்சை பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அழகர் ஆற்றில் இறங்கும் காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
undefined
இதையும் படிங்க: 6 மாணவிகளுக்கு ஓயாமல் பாலியல் டார்ச்சர்! தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டு சிறை! அதுமட்டுமல்ல! கோர்ட் பரபர தீர்ப்பு
இந்நிலையில், சித்திரைத் திருவிழாவைக் காண வந்த இளைஞர்கள், வைகை ஆற்றுக்குள் இரண்டு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். கத்தி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் விரட்டி விரட்டி தாக்கியது. இதில் மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிவகங்கையைச் சேர்ந்த சோனை ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனை பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இதையும் படிங்க: கல்யாணத்த கிட்ட வச்சுக்கிட்டு செய்ற வேலைய இது! ஓரினச்சேர்க்கைக்கு ஆசைப்பட்ட IT ஊழியர்!இறுதியில் நடந்த ட்விஸ்ட்
இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோனை என்பவர் சிகிச்சை பலன்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.