தூத்துக்குடியில் சிறுமிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்திய இளைஞர்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

By Velmurugan s  |  First Published Apr 23, 2024, 10:44 AM IST

தூத்துக்குடியில் சிறுமியை ஏமாற்றி தாலிக்கட்டி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.


தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 26) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

திருச்சியை கதிகலங்க வைத்த இளம்பெண்ணின் மர்ம மரணம்; காதலன் அதிரடி கைது

Latest Videos

undefined

இவ்வழக்கை அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் புலன் விசாரணை செய்து, அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா கடந்த 08.02.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பெயரில் மோசடி; கோவையில் பாஜக பிரமுகர் மீது பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமனுஜம் இன்று நேற்று குற்றவாளியான மணிகண்டனுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக எல்லம்மாள், மற்றும் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி ஆகியோர் ஆஜராகினர்.

click me!