கேள்வி கேட்ட ஆசிரியர்... மார்பை பிடித்து மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்த மாணவி.. வகுப்பறையில் பயங்கரம்.

Published : Sep 08, 2022, 11:35 AM IST
கேள்வி கேட்ட ஆசிரியர்... மார்பை பிடித்து மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்த மாணவி.. வகுப்பறையில் பயங்கரம்.

சுருக்கம்

ஆசிரியர் கேள்வி கேட்டு கொண்டிருந்தபோதே மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் அரசுப்பள்ளியில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது . 

ஆசிரியர் கேள்வி கேட்டு கொண்டிருந்தபோதே மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் அரசுப்பள்ளியில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 

ஒரு காலத்தில் பலவீனமானவர்களை மட்டுமே ஏற்பட்டுக் கொண்டிருந்த மாரடைப்பு இப்போது வயது வித்தியாசமின்றி  எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. 60 வயது கடந்த ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களையே அதிகம்  மாரடைப்பு தாக்கி வந்தது, ஆனால் இப்போது பள்ளி மாணவர்களும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இந்த வரிசையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் வகுப்பறையில் பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத்  அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது, அதே பகுதியை சேர்ந்த  சேக் சஜிதா என்ற மாணவி ஏழாம் வகுப்பு படித்து வந்தார்,

இதையும் படியுங்கள்: திருமணமான 5வது நாளில் இளம்பெண் ஆணவக்கொலை? நடந்தது என்ன.. வெளியான பகீர் தகவல்..!

அப்போது ஆசிரியர் மாணவியிடம் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாணவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது நெஞ்சை பிடித்துக்கொண்டு மாணவி மயங்கி சுருண்டு கீழே விழுந்தார், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள், மாணவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி  சேக் சஜிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதையும் படியுங்கள்: அடச்சி.. குடிபோதையில் ஒரு அப்ப பொண்ணு கிட்ட செய்ற வேலையை இது.. கருமம் கருமம்..!

பின்னர் இந்த துயரச் செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மருத்துவ மனைக்கு வந்த பெற்றோர்  மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர், அது அங்கிருந்த பலருக்கும் கண்ணீரை வரவழைக்கும் விதமாக இருந்தது, பின்னர் இதுகுறித்து ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர், அதில் பள்ளியின் உயிரியல் ஆசிரியர், மாணவியிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருந்தேன், மாணவியும் அதற்கு நல்ல முறையில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். 

அப்போது திடீரென ஒரு பக்கமாக சாய்ந்தார், கை கால்களை உதைத்துக் கொண்டார், வலிப்பு நோய் ஏற்பட்டு விட்டதே என கையில் பேனாவை திணித்தேன், ஆனால் மாணவியின் உடல் திடீரென அடக்கி விட்டது, ஐந்து நிமிடத்திற்குள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம், ஆனால் அங்கு மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினார் என வேதனையுடன் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்