பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை.. பெண்ணை மடியில் அமரவைத்து அசிங்கம்.. குற்றமே இல்ல , நீதிபதி கருத்து.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2022, 10:01 AM IST
Highlights

பெண்கள் ஆபாசமாக உடை அணியும் போது அவர்களுக்கு எதிராக பாலியல் சீண்டல் நடைபெறுவது குற்றம் ஆகாது என  கேரள  நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 74 வயது மாற்றுத்திறனாளி  எழுத்தாளர் ஒருவர் வலுக்கட்டாயமாக மடியில் அமர வைத்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கருத்தைக் கூறியுள்ளது


 

பெண்கள் ஆபாசமாக உடை அணியும் போது அவர்களுக்கு எதிராக பாலியல் சீண்டல் நடைபெறுவது குற்றம் ஆகாது என கேரள  நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 74 வயது மாற்றுத்திறனாளி  எழுத்தாளர் ஒருவர் வலுக்கட்டாயமாக மடியில் அமர வைத்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கருத்தைக் கூறியுள்ளது. 

கேரளாவில் பிரபல எழுத்தாளராக இருந்து வருபவர் சிபிச்சந்திரன் (74), இவர் மீது இரண்டு பாலியல் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி நந்தி கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் சிபிச் ச்சந்திரன் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து தன் மடியில் அமர வைத்து முத்தமிட முயன்றதுடன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்  என்பது ஒரு வழக்கு, இதேபோல் ஜூலை 29 அன்று கோழிக்கோட்டில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில் எழுத்தாளர் தன்னை பிடித்து மடியில் அமரவைத்து கட்டி அணைத்து தகாத முறையில் நடந்துகொண்டார் என்பது மற்றோரு வழக்கு. இந்த இரண்டு வழக்குகளும் நிலுவையில் இருந்து வருகிறது.

இதில் முன்ஜாமீன் கேட்டு எழுத்தாளர் சிபிச்சந்திரன் கோழிக்கோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை கோழிக்கோடு செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ண குமார் முன்னிலையில் இருந்தது, சம்பவத்தன்று அந்த பெண் தன்னுடன் இருந்த புகைப்பட ஆதாரங்களை எழுத்தாளர் தரப்பு நீதிமன்றத்திற்கு வழங்கியது. இதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணும் சில புகைப்பட ஆதாரங்களை நீதிபதி முன்பு வைத்தார்.இந்நிலையில்தான் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார் தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குறிப்பாக பெண்ணுரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதைக் கேட்டு கொதிப்படைந்துள்ளனர். ஆகஸ்ட் 2ஆம் தேதி அவர் இது தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பின் விவரம் பின்வருமாறு:-

குற்றம்சாட்டப்பட்டுள்ள சிபிச்சக்கரவர்த்தி சாதிய அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார், பல போராட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளார், தனது புத்தகத்தில் சாதியை  அமைப்பை அவர் கடுமையாக தாக்குகிறார், அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, சாதி அமைப்புக்கு எதிராக போராடுபவர், அவர் மீது போலீசார் ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்திருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது கல்வி சான்றிதழில் தனக்கு ஜாதியோ மதம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவருக்கு எதிரான வழக்கு நிற்காது,  அதுமட்டுமின்றி அந்தப் பெண் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது  அந்தப் பெண் அணிந்துள்ள ஆடை பாலியல் உணர்வை தூண்டும் வகையில் உள்ளது. எனவே இது நிற்காது என அவர் கூறியுள்ளார். 

74 வயதான மாற்றுத்திறனாளி எழுத்தாளர் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை மடியில் அமர வைத்து பாலியல் தொல்லை செய்தார் என பெண் தரப்பில் கூறும் குற்றச்சாட்டு நம்பும்வகையில் இல்லை எனக்கூறியதுடன் அந்த எழுத்தாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் எழுத்தாளருக்கு ஆதரவாக நீதிபதி தெரிவித்துள்ள கருத்தில் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஒரு பெண் அணிந்துள்ள ஆடை பாலியல் உணர்வை தூண்டும் வகையில்  இருக்குமேயானால், அங்கு அவருக்கு பாலியல் சீண்டல் நடந்தால் அது தவறு இல்லை என்பது போல அந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

நீதிபதியில் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது,  உங்களில் கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை எழுத்தாளருக்கு எதிராக கொடுத்திருந்த புகாரை திரும்பப்  பெற தனக்கு அழுத்தங்கள் வருவதாகவும், இந்த நீதிபதியைப் போலவே பலரும் அந்த எழுத்தாளருக்கு எதிராக முன்வந்து நற்சான்றிதழ் கொடுப்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!