பாட்டி.. அம்மா கிட்ட சொன்னாலும் கண்டுக்கல.. என்ன அந்த மாமா கண்ட இடத்தில் கை வைத்து இப்படிலாம் பண்ணாரு.!

By vinoth kumar  |  First Published Jul 26, 2023, 12:01 PM IST

கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். 


கோவையில் கள்ளக்காதலியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காதலனையும், உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. காதலனுடன் பைக் ரைட் போன இளம்பெண்.. 10 காமக்கொடூரர்களால் கூட்டு பலாத்காரம்.!

இந்நிலையில், மஞ்சுளாவிற்கும் சென்னையில் தனியார் பத்திரிக்கை நிறுவனத்தில் பணியாற்றி வரும் பால் பிரவீன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மஞ்சுளாவின் வீட்டிற்கு வந்த பால் பிரவீன் 9ம் வகுப்பு படித்து வரும் மஞ்சுளாவின் மகளிடம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க;-  Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

இதனால் பயந்து போன பள்ளி மாணவி பால் பிரவீனின் செய்கை குறித்து தனது பாட்டியிடம் கதறிய படியே தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி பால் பிரவீன் மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் மகள் மீதான பாலியல் சீண்டலில் தாயும் உடந்தை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனையடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பால் பீரவின் மற்றும் மஞ்சுளாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!