திருமணமான 100 பெண்களுடன் உடலுறவு.. 200 இளம் பெண்களுடன் காதல்.. 23 வயது இளைஞன் கைது.

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2021, 11:56 AM IST
Highlights

பெரும்பாலும் அதில் பாதிக்கப்பட்டவர்களில் 200 பெண்கள் இளம் வயதுடையவர்கள் என்றும் அவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்ந்தவர்கள் என்பதும் மேலும் 100 பேர் திருமணமானவர்கள் என்பதும் தெரியவந்தது. பிரசாந்த் ரெட்டி, ராஜா ரெட்டி மற்றும் டோனி என வெவ்வேறு பெயர்களில் பிரசன்ன குமார் சமூகவலைதளத்தில் வலம் வந்துள்ளார்.

பெண்களை காதலிப்பது போல் நடித்து பின்னர் அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து, நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்தார் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கிட்டத்தட்ட 300 பெண்கள் அந்த இளைஞரால் ஏமாற்றப்பட்டு இருப்பதாக போலீசார் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் தான் இந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றுவது, வரதட்சனை கேட்டு குடும்ப வன்முறை, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும், காவல் துறையும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியடை வைக்கும் வகையில் ஆந்திர மாநிலம்  கடப்பா நகரில் 23 வயதான இளைஞர் பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் பாலியல் உறவு கொண்டு, அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பதுதான் அது. 

கடப்பா மாவட்டம் பிராட்டாத்தூர்  பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார்(23) இவர் பிடெக் படிப்பை பாதியில்  கைவிட்டவர் ஆவார். நிரந்தர வேலை எதுவும் இல்லாத பிரசன்னகுமாருக்கு சில பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது, காலப்போக்கில் அவர்களுடன் பழகி, அவர்குடன் உடலுறவில் ஈடுபட்டு, அவர் சிறிய அளவில் பணம் நகை உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு பின்னர் அவர்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. நாளடைவில் அதையே தனது பிரதான தொழிலாக மாற்றிக் கொண்ட அவர், அந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு காதல் வலை விரித்துள்ளார். எதிர்பார்த்தபடியே ஹைதராபாத், விஜயவாடா, கடப்பா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சிறுமிகள் முதல் திருமணமான பெண்கள் வரை மொத்தம் 300 க்கும் மேற்பட்டோர் அவரது வலையில் சிக்கியுள்ளனர். பின்னர் ஒவ்வொருவராக பட்டியலிட்டு அவர் காதலிப்பது போல் நடித்து, உல்லாசம் அனுபவித்து பணம் மற்றும் நகைகளை பறித்து வந்துள்ளார். 

இப்படி பல பெண்களுடன் ஆன்லைன் மூலம் பழகி அறிமுகமாகி பின்னர் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது புகைப்படங்களை எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என கூறி பலமுறை மிரட்டி அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அதில் பாதிக்கப்பட்டவர்களில் 200 பெண்கள் இளம் வயதுடையவர்கள் என்றும் அவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்ந்தவர்கள் என்பதும் மேலும் 100 பேர் திருமணமானவர்கள் என்பதும் தெரியவந்தது. பிரசாந்த் ரெட்டி, ராஜா ரெட்டி மற்றும் டோனி என வெவ்வேறு பெயர்களில் பிரசன்ன குமார் சமூகவலைதளத்தில் வலம் வந்துள்ளார். பல பெண்களுடன் உடலுறவு கொண்டு அவர்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, பின்னர் அவர்களிடம்  நகை பணம் பறிப்பது இவருடைய வேலையாக இருந்து வந்தது.

சந்தேக வழக்கில் அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், இவர் மேற்கண்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை துருவித் துருவி விசாரித்ததில் அவர் பல விஷயங்களை கக்கியுள்ளார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதி பல பெண்கள் புகார் கூறவில்லை என்றும், ஆனால் விசாரணையில் பிரசன்னகுமார், தான் செய்த தவறை ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  பிரசன்னகுமாரின் மொபைல் போனை பறித்து ஆராய்ந்ததில், அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017இல் இவர் ஏற்கனவே சங்கிலி பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!