உன்மேல அவருக்கு ரொம்ப ஆசை.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமோ.. கள்ளக்காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்.!

Published : Apr 01, 2022, 09:11 AM ISTUpdated : Apr 01, 2022, 09:15 AM IST
உன்மேல அவருக்கு ரொம்ப ஆசை.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமோ.. கள்ளக்காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்.!

சுருக்கம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுனிதாவின் மகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை ஒருவர் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், தன்னை காப்பாற்றும் படியும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். 

கன்னியாகுமரியில் 11ம் வகுப்பு மாணவியை மூன்று மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்வதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயார் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

கள்ளக்காதல்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி சுனிதா. இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். கூலி தொழிலாளியான ராமசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் முதுகு தண்டுவட பிரச்சனையால் படுத்த படுக்கையாகி வீட்டிலேயே முடங்கியுள்ளார். ராமசாமி முடங்கிய நிலையில் குடும்ப வறுமையால் அவரது மனைவி சுனிதா புதுக்கடை பகுதியில் ராஜையன் என்பவர் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் வேலைக்காக சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க;- காதலன் ஃபர்ஸ்டு நண்பர்கள் நெக்ஸ்ட்.. போதை பொருள் கொடுத்து பள்ளி மாணவியை நாசம் செய்த கும்பல்.. சென்னையில் பகீர்

கதறிய சிறுமி

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுனிதாவின் மகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை ஒருவர் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், தன்னை காப்பாற்றும் படியும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

தாய் உடந்தை

தாய் சுனிதா தான் வேலை பார்க்கும் பர்னிச்சர் கடை உரிமையாளர் ராஜையனுடன் நெருங்கி பழகி வந்ததாகவும், வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை தனது வீட்டிற்கு வரும் அவர் தாயுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி ஞாயிற்று கிழமை வீட்டிற்கு வந்த ராஜையன் தனது தாய் இல்லாததால் தன்னை அறைக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.

போக்சோவில் கைது

மேலும் சம்பவம் குறித்து தாயிடம் கூறிய போது தாய், அட்ஜெஸ் பண்ணிக்கோ என்று கூறியதோடு வெளியே சொல்லாதே என்றும் கண்டிதுள்ளார். இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வரும் போதெல்லாம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். புகாரின் பேரில் சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ராஜையன் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் சுனிதா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- பூஜைக்கு வந்த பூசாரியுடன் மனைவி உல்லாசம்.. வீடியோ எடுத்த கேவலமான கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!