’சைக்கோ’ மாமனுக்கு ஓகே சொன்ன முறைப்பெண்.. நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. அதிர்ச்சி பின்னணி !

Published : Apr 01, 2022, 08:35 AM IST
’சைக்கோ’ மாமனுக்கு ஓகே சொன்ன முறைப்பெண்.. நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. அதிர்ச்சி பின்னணி !

சுருக்கம்

பாண்டிக்கு பிரியாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெரியோர்கள் முடிவு செய்த நிலையில், பிரியாவின் பாட்டி வெளியே சென்றுள்ளார். அப்பொழுது பசுபதியும், பிரியாவும் தனியே வீட்டில் இருந்துள்ளனர். 

விரைவில் திருமணம் :

நெல்லை மாவட்டம் அயன்சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி என்ற பாண்டி. இவருக்கு வயது 35 ஆகும். இவருடைய முறைப்பெண் பிரியா, இவருக்கு வயது 25. பிரியாவின் அப்பா, அம்மா ஏற்கெனவே இறந்து விட்டபடியால் அவருடைய தகப்பனாருடைய இரண்டாவது மனைவியான சித்தியின் அரவணைப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக, சித்தி சொந்த வேலை காரணமாக மும்பை சென்றபடியால், பிரியாவை தன் தாய் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

ஏற்கெனவே பாண்டிக்கு பிரியாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெரியோர்கள் முடிவு செய்த நிலையில், பிரியாவின் பாட்டி வெளியே சென்றுள்ளார். அப்பொழுது பசுபதியும், பிரியாவும் தனியே வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கையில், பிரியாவை பாண்டி சுத்தியலால் அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

கொலை செய்ததற்கு காரணம் ? :

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பசுபதியைப் பிடித்து, கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்து வருகின்றனர். இதில் பாண்டிக்கு அவ்வப்பொழுது மனநலம் பாதிக்கப்படும் என்றும்; அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து பசுபதியை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!